தமிழீழம்,

தமிழீழம்,

Sunday, February 27, 2011

இரத்தத்தால் சிவந்த தமிழர் தாயகப்பகுதியில் மானத்தை விற்று வாழ நாம் ஒன்றும் மானங்கெட்ட தமிழர் அல்லர்- சங்கிலியன் படை

இரத்தத்தால் சிவந்த தமிழர் தாயகப்பகுதியில் மானத்தை விற்று வாழ நாம் ஒன்றும் மானங்கெட்ட தமிழர் அல்லர்- சங்கிலியன் படை

Friday, February 25, 2011

தேசிய தலைவரின் அண்ணா தமிழ் மக்களுக்கு நன்றி: அதிர்வின் நேர்காணல்

தமிழீழ தேசிய தலைவரின் அண்ணா, திரு.மனோகரன் அவர்கள் அதிர்வு இணையத்துக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் தனது தாயார் தேசத்தின் அன்னை பார்வதி அம்மாளின் ஈமைக் கிரிகைகளுக்கு தமது குடும்பம் ஏன் செல்லவில்லை என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார். மேலும் தேசத்தின் அன்னை பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகளை தாமாகவே முன் நின்று நடாத்திய மக்களுக்கு தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார். காணொளி இணைப்பு.

Wednesday, February 23, 2011

இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இறுதிநேரம் வரை பல நெருக்கடிகளின் மத்தியிலும் எமது தேசத்தின் பேரன்னையின் நலன் பேணலில் அக்கறையெடுத்து உறுதுணையாகச் செயற்பட்ட அனைவருக்கும் இந்நேரத்தில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு பேரன்னையின் பிரிவால் துயருறும் இவரின் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Tuesday, February 22, 2011

தீயில் சங்கமமான பார்வதிஅம்மாள்! (காணொளி, பட இணைப்பு)





தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் உடல் இன்று மாலை தீயில் சங்கமம் ஆனது.

பார்வதி அம்மாளின் உடல் யாழ். வல்வெட்டித்துறை ஊரணி பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மைத்துனரான சங்கரநாராயணன் சிதைக்கு தீ மூட்டினார்.

இறுதிக் கிரியைகள் இடம்பெற்றபோது இந்தியாவின் ம.தி.மு.க. தலைவர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறன், திரைப்பட இயக்குநர் சீமான், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் தொலைபேசி மூலம் இரங்கல் உரை நிகழ்த்தினர்.

Monday, February 21, 2011

புலித்தாயின் முகம் காண புலிப்பிள்ளை வருவாராம் பீதியில் ராணுவம்..........

புலித்தாயின் முகம் காண புலிப்பிள்ளை வருவாராம் பிடிப்பதற்கு இராணுவம் தயாராம் இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பலரிடம் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கடல்பிரதேசமும் பலத்த பாதுகாப்பில் ஈழத்தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வரும் மக்களை திருப்பி அனுப்பும் இராணுவம். போக்குவரத்தும் தடுக்கப்படலாம், இளைஞர்கள் பலர் கைது, பதட்டத்தில் இன்று யாழ்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் மறைவையொட்டி வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் பறக்கவிடப்பட்டிருந்த கறுப்புக் கொடிகள் அனைத்தினையும் அங்கு திடீரென வந்த படையினர் அகற்றியதன் காரணமாக வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் பதற்றம் நிலவுதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு நேற்று இரவு பல இளைஞர்களை புலனாய்வுப் பிரிவினர் கடத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட சில இளைஞர்களே மரங்களில் ஏறி கறுப்புக்கொடிகளைக் கட்டியதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதில் சில இளைஞர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், மேலும் சிலரை இராணுவத்தினர் தடுத்துவைத்துள்ளதாகவும் இன்னும் சிலரை இராணுவம் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அன்னையின் இறப்பும் தமிழர்களை எழிச்சிகொள்ள வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசத்தாய் கண்ணீர் அஞ்சலியின்போது ஈழத்தாய் ஒருவரின்உள்ளக் குமுறல்...............

Saturday, February 19, 2011

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் காலமானார்! (பட, ஒலிப் பதிவு இணைப்பு)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் காலமானார்! (பட, ஒலிப் பதிவு இணைப்பு)


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் இன்று காலையில் யாழ்.வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் காலமானார்.

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கட்சியின் செயலாளர் நாயகமும், பார்வதி அம்மாளின் பாதுகாவலராக இருந்து வந்தவருமான முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

பார்வதி அம்மாள் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நோயால் பீடிக்கப்பட்டு இருந்தார்.

இறக்கும்போது இவருக்கு வயது-81.

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்.(படம் இணைப்பு)





தமிழீழ தேசிய தலைவரின் தாயார்: தேசத்தின் அன்னை இன்று அதிகாலை 6.30 மணிக்கு இறையடி எய்தினார். 
                       

மாவீரனை சுமந்த தமிழ் தாயை இழந்துவிட்டோம்.

ஐயோ ..ஏன் எங்களுக்கு மட்டும் இத்தகைய சோகம்......

Friday, February 18, 2011

ராஜபக்சே கொடும்பாவியை எரித்த ரஜினி ரசிகர்கள் கைது.

திருப்பூர் ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை ராணுவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மன்ற பொருளாளர் ராஜா தலைமை தாங்கினார். ரசிகர்கள் கரடான்காடு – தாராபுரம் சாலையில் திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசை கண்டித்து கோசமிட்டபடியே ராஜபக்சேவின் கொடும்பாவிக்கு தீ வைத்து எரித்தனர். சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் பத்திரமாக மீட்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர். அரசியல் கட்சிகளை தொடர்ந்து ரசிகர் மன்றங்களும், மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tuesday, February 15, 2011

தமிழ் தேசிய சிந்தனையாளரும் தமிழீழ ஆதரவாளருமான புதுக்கோட்டை சு.முத்துக்குமாரை சற்று நேரத்தின் முன்னர் சிலர் வெட்டிக்கொன்றுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்தவர் சுப.முத்துக்குமார்.
ஈழப்போரின் கடைசி நேரத்தில் சிறீலங்கா அரசபயங்கரவாத போரினால் காயம்பட்ட மக்களுக்கு மருத்துவத்திற்கு தேவையான மருந்துப்பொருட்களை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் காட்டில் இருந்தவர்.   இவருக்கு தமிழ் உணர்வாளர்களுடன் அதிக உறவு உண்டு.
இவர் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கரு.காளிமுத்து என்பவரின் மகளை திருமணம் செய்தார்.
சமீபகாலமாக  ஈழப்பிரச்சனையில் மிகவும் தீவிரமாக செயல்பட்டுவந்தார்.     சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டுவந்தார்.
சீமான் கலந்துகொள்ளும் எந்த விழாவாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குவதில் முக்கிய பங்குவகித்தவர்.
கடந்த மாதத்தில் சீமான் உயிருக்கு சிலர் குறி வைத்திருப்பது தெரிந்ததும்,  சீமானுக்கு  பலத்த பாதுகாப்பு பணியை செய்து வந்ததும் முத்துக்குமார்தான்.
இந்த நிலையில் இன்று இரவு 10 மணிக்கு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இவர் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்

Sunday, February 13, 2011

மாவீரர்கள் நினைவில்.........................

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.... அறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப் போர் உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது. -: தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்

Friday, February 11, 2011

Monday, February 7, 2011

Sunday, February 6, 2011

பிரித்தானியாவில் தமிழீழத் தேசியக்கொடிக்கு தடையில்லை!: பிரித்தானியக் காவல்துறை

                              சிறிலங்காவின் சுதந்திரதினத்தை கறுப்பு தினமாக அறிவித்துள்ள தமிழ் மக்கள்,
இன்று புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள சிறிலங்காவின் தூதுவராலயங்களுக்கு முன்பாக
கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
குறிப்பாக பிரான்ஸ், பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டங்களில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக அறியவருகின்றது.
இன்று பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழீழ தேசியக் கொடிக்கு
எதிராக சிறிலங்கா எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரித்தானியத்
தூதரகம் முன்பாக தமிழீழ தேசியக் கொடியுடன் பெருமளவான மக்கள்
கலந்துகொண்டிருந்தனர்.
தமிழீழத் தேசியக் கொடி தடை செய்யப்பட்டதாக பிரித்தானியக் காவல்துறைக்கு அறிவித்த சிறிலங்கா தூதுவராலயம், அதனை மக்கள் பிடித்திருப்பதை தடுக்குமாறும் கோரியிருந்துள்ளது.
இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர், தடை செய்யப்பட்ட கொடியைப் பிடிக்க
வேண்டாம் என்று வலியுறுத்தியதுடன் எல்லாவற்றையும் மடித்து வைக்குமாறு கூறியுள்ளனர்.
ஆனால் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் தமிழீழத் தேசியக் கொடி
பிரித்தானியாவில் தடை செய்யப்படவில்லை என்பதை எடுத்து விளக்கியுள்ளனர். அதன்
பின்னர் காவல்நிலையம் சென்று வந்து பதில் தெரிவிப்பதாகக் கூறிச்சென்ற
காவல்துறையினர், பின்னர் மீண்டும் அங்கு வந்து தமிழீழ தேசியக் கொடியைப்
பிடிப்பதற்கு தடை எதுவும் இல்லை என்று கூறியதுடன், மக்கள் தொடர்ந்து அதனைப்
பிடித்திருப்பதற்கும் அனுமதித்துள்ளனர்.
தமிழீழத் தேசியக் கொடியின் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்த முயன்ற
சிறிலங்கா, தனது சுதந்திர நாளில் தனது முகத்தல் தானே கரியைப்
பூசிக்கொண்டுள்ளது. அத்துடன், பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடியைப்
பிடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் சில தமிழ்ப் பிரமுகர்களின் முகத்திலும்
இது அறைந்திருக்கும் என்றே கருதலாம்.  

சிங்கள மடத்தை தாக்கிய வழக்கில் டேவிட் பெரியார் - நேர்காணல் தமிழ் தேவன்

                                                                             

Friday, February 4, 2011

அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம்: சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில் பிப்ரவரி இறுதியில் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் தனது தலைமையில் நடைபெறும் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை நடத்துகின்றது. மேற்கண்ட இரண்டு முகாம்களும் இலங்கை கொடுங்கோலன் ராஜபக்சேவின் மீள் குடியேற்ற முகாமினை விட மோசமாக உள்ளது.

ஆடு மாடுகளை அடைக்கும் கொட்டகையை விட மிக கேவலமாக அடிப்படை வசதிகள் ஏதுமற்ற இடத்தில் அங்கு தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லியில் 4 தமிழர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களை சட்டத்திற்குப் புறம்பாக முகாம் என்ற பெயரில் அங்கு அடைத்து வைத்துள்ளது.

முகாம்களில் உள்ளவர்களை உறவினர்களோ, வழக்கறிஞரோ பார்க்க வேண்டும் என்றால் அரசின் அனுமதி பெற வேண்டும். அது என்றும் கிடைப்பது இல்லை.அதிலும் பூந்தமல்லி முகாம் அமைந்துள்ள இடம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை அடைத்து வைப்பதற்கான உயர் பாதுகாப்பு சிறையாக இருந்த இடமாகும். அங்கு முகாமினைச் சுற்றிலும் மதில் மேல் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. உள் இருக்கும் ஒவ்வொரு அறையும் நாஜிகளின் சித்திரவதைக்கூடம் போல் இருக்கிறது.

முகாமிற்கு மேற்கூரை என்று எதும் இல்லை. கம்பிகள் தான் வேயப்பட்டுள்ளது. கடும் வெயிலோ பெரு மழையோ, குளிரோ அப்படியே உள்ளே இருப்பவர்களைப் பாதிக்கிறது. முகாமினைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கில் காவலர்கள் மற்றும் உளவுத்துறையினர் நிறுத்தப்பட்டு அந்த இடம் பயங்கரமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் தமிழக அரசின். இந்த செயலானது மனித நேயத்திற்கு முற்றிலும் எதிரான செயல். சிறையை விடக் கொடுமையாக இருக்கும் இடத்தை முகாம் என்று கூறி அடைத்து வைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை.

தற்பொழுது பூந்தமல்லியில் உள்ள தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டும் என்ற தங்கள் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி 5 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அங்குள்ளவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கண்துடைப்பாக ஏதாவது செய்து பிரச்சனையை அரசும் அங்குள்ள அதிகாரிகளும் திசை திருப்புகின்றனர். அவர்களை விடுவிக்க மறுக்கின்றனர்.

இந்த அவல நிலை தொடராமல் இருக்க நாம் தமிழர் கட்சி சார்பில் பிப்ரவரி இறுதியில் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கத்தினர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்



03-01-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் முன்னிலையில் மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவி சமுத்திராதேவி அவர்கள் தலைமையில் 25 பேர் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, தடா, ராசா, ஆவல் கணேசன், கருப்புக்குரல் .கோ, அமுதா நம்பி,ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவிஞர் புதுவை ரத்தினதுரை ஐயா அவர்கள்...

Wednesday, February 2, 2011

தூத்துக்குடிக்கும் கொழும்ப...ுக்கும் மிடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிங்களத் தீவுக்கு பாரதி கட்டிய பாலமும்-வ உ சிதம்பரம் அனுப்பிய கப்பலும்! “பொய்ம்மை தீர,மெய்ம்மை நேர வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி) “ - சுப்ரமணிய பாரதி எதிர்வரும் மாசி ( பெப்ருவரி) மாதக் கடைசியில் தூத்துக்குடிக்கும் கொழும்ப...ுக்கும் மிடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. அதற்கான அறிவித்தல்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன.அதுவும் அந்த பயணிகளுக்கான கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்படும் கப்பலின் பெயரும் வ. உ .சி சிதம்பரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரபோராட்டத்தில் பிரித்தானியா அந்நிய ஆட்சியாளர்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் ஒன்றாக வ.உ.சி என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த வ. உ . சிதம்பரம்பிள்ளை பிரித்தானியா கப்பல்களுக்கெதிராக நடத்தி காண்பித்த சுதேசிய கப்பல் சேவையை குறிப்பிடலாம். பிரித்தானிய ஆட்சியாளர்களுக் கெதிராக கொழும்புக்கும் தூத்துக்குடிக்கு மிடையில் சுதேசிய கப்பல் சேவை நடத்தி காட்டி தமது பிரித்தானிய ஆட்சி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சி. சிதம்பரம்பிள்ளை என்பதுடன் மறுபுறம் இந்திய உப கண்டம் தழுவிய மாபெரும் சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டையும் அங்கு வாழ்ந்த தமிழரையும் கப்பலோட்டிய தமிழன் என்ற சிறப்பினை பெற்று வரலாற்றில் பதிவு செய்தவர். அன்று அவர் கொழும்புக்கு தூத்துக்குடியிலிருந்து கப்பல் விட்டபோது அக்கால கட்டத்தில் நன்கு தமிழகத்தில் அறியப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் ( இலங்கையில் தமிழர் வரிந்து கொண்ட ஆயுதம் தூக்கிய “வீரர்கள்” போலல்ல இந்த சுதந்திர வீரர்கள் ) கலந்து கொண்டு மகாகவி சுப்ரமணிய பாரதி உட்பட அந்நிகழ்வை கொண்டாடினார்கள். அந்நிகழ்வில் தமது தேச பக்தியையும் எதிர்கால சுபீட்சமிகு இந்தியாவையும் பற்றி “பாரத தேசம்” கவிதையை பாரதி பாடினார் அல்லது எழுதினார். பொதுவாகவே பாரதி தனது கவிதைகளை பாடி சொல்லும் வழக்கமுடையவர் என்பதால் அக்கவிதையை பாடியுமிருக்கலாம். இந்த கவிதையில் தான் அவர் “வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் “ என்று தொடங்கும் நீண்ட கவிதையில் மேற்குலகுக்கு கப்பல் விடுவோம் என்பதற்கப்பால் தமது நாட்டுக்கு மிக அண்மையாகவுள்ள சின்னஞ சிறிய தீவான இலங்கைக்கு பாலம் அமைக்க கூட கனவு கொண்டார். அதனால் தான் கொழும்புக்கு கப்பல் விட்ட நிகழ்வுடன் பாரதி இலங்கைக்கு பாலம் அமைக்கும் கனவினை ஒரு இந்திய ஆக்கிரமிப்பு கருத்துடன் அல்லாது இரு நாடும் இணையம் (புராண காலத்தில் -ராமாயணத்தில் – இராமன் இலங்கைக்கு கட்டிய பாலம் உட்பட்ட பகுதி சேது என்று அழைக்கப்படுகிறது ) சிதைவுற்ற தொட்டம் தொட்டமான மணற் தொடுகையான சேதுவை மேடுறுத்தி பாலமைக்க கனவு கண்டார். “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” ஆனால் பாரதியின் இந்த கவிதை முழுவதும் சுதந்திர இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வ உ.சீ யின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான (Bio-picture) கப்பலோட்டிய தமிழனில் பயன்படுத்தப்படவில்லை. அதிலும் குறிப்பாக “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்ற கவிதைப் பகுதி தவிர்க்கப்பட்டது. அவ்வரிகள் அரசியல் சம்பந்தப்பட்ட அந்த திரைப்படத்தில் அரசியல் காரணங்களுக்காகவே தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும் என்பதனையும் ஊகிக்க கூடியதாகவிருந்தது. ஆனால் அதற்கு பின்னர் தயாரிக்கப்பட்ட சமூக தமிழ் திரைப்படமான கைகொடுத்த தெய்வம் படத்தில் தான் (இரு திரைப்படங்களிலும் சிவாஜி கணேஷன் நடித்திருந்தார்). பாரதியின் பாரத தேச பாடலின் முன்னைய பாடலில் தவிர்க்கப்பட்ட கவிதை பகுதிகள் இடம் பெற்றன. “ சிந்து நதியின்மிசை நிலவினிலே” என்ற பாடலின் பகுதியாக “சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்ற கவிதை வரிகளும் அந்த திரைப்பட ( சினிமா ) பாடலின் பாடல் வரிகளாக இடம் பெற்றன. ஆக மொத்தத்தில் பாரதி கண்ட சேதுவை மேடுறுத்தம் கப்பல் கால்வாய் திட்டம் அவ்வப்போது மேலெழுந்து மீண்டும் மூழ்கி அரசியல் சர்ச்சைக்குள் அவதியுறும் ஒரு திட்டமாக -கனவாக-இருக்கிறது. ஆனால் வ.உ சி கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் கப்பல் ஒட்டி காட்டியது ஒருபுறம்மிருக்க பின்பு இலங்கையில் தலை மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் மிடையே பயணிகள் கப்பல் சேவை நடைபெற்று வந்ததும் , அது வடக்கில் ஆயுத பயங்கரவாதம் காலுன்ற தொடங்கியதும் இடை நிறுத்தப்பட்டதும் பின்னர் பல தசாப்தங்களுக்கு பின்னர் மீண்டும் இப்போது இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வட புலத்தில் இந்திய பூர்வீக திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் (திருவேங்கடம் எனும் பெயர் இலங்கை வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களால் சூட்டப்படும் பெயர் அல்ல ) இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டு அழிக்கப்பட்டு போனபின் தென் இந்திய வடபுல இலங்கை கடல் வழி சுதந்திர பயணங்கள் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி யின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு சுதந்திர நடமாட்டத்தின் ஒரு அம்சமாகவே இக்கப்பல் கப்பல் ஒட்டிய தமிழனை நினைவூட்டி புறப்பட போகிறது. ஆனால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபணம் சில காலத்தின் பின்னர் “சிந்து நதியின்மிசை நிலவினிலே” என்ற பாடலை ஒலிபரப்புவதை அரசியல் காரணமாக தவிர்த்துக்கொண்டது. இத் தவிர்ப்பும் ஒருவேளை தமிழர் தரப்பில் “சிங்கள தீவு” என்ற பதத்தை விரும்பாத தமிழ் ஒலி பரப்பு கூட்டுத்தாபன மேல் மட்ட தமிழ் நிர்வாகிகள் தங்களின் பதவி நிலையை பயன்படுத்தி சேதுவை மேடுறுத்தி பாலமைக்க கூறும் பாடல் வரிகளை இந்திய ஆக்கிரமிப்பு சிந்தனையாக இலங்கை அரசிடம் காட்டி சிங்கள தீவு என்று இப்பாடலில் குறிப்பிடுவதை சகிக்க முடியாமல் சாமார்த்தியமாக தவிர்க்க தங்களின் அரசியலை செய்திருக்கிறார்கள் என்பதும் நோக்கற்பாலது. எனது பல்கலைக்கழக காலத்தில் ஒரு தடவை பேராதனை பொறியியல் பீட மண்டபத்தில் நடைபெற்ற ஒரு கலை விழாவில் “சிந்து நதியின்மிசை” என்ற பாரதியின் கைகொடுத்த தெய்வம் படப் பாடலை ஒரு பொறியியல் துறை மாணவர் அந்நிகழ்வில் பாடினார். அவர் அப்பாடலை பாடியபோது ““சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்ற வரிகள் வரும் இடத்தில் “தமிழீழத்திற்கோர் பாலம் அமைப்போம்” என்று பாடி தமிழ் மாணவர்களின் பலத்த கரகோசத்தை பெற்றார். அதுவே சிங்களதீவின் மீதான எதிர்பினை கோடிட்டு காட்டியதுடன் அங்கு அக் காலகட்டத்தில் பல்கலைக் கழக சூழலில் நிலவிய தமிழ் இளைஞர்களின் தமிழர் விடுதலை கூட்டணி ஊட்டி வளர்த்த பிரிவினைவாதமும் ஜே வீ பியின் -ரோகன விஜேவீரவின்- தீவிரவாதமும் சமகாலத்தில் தளம் கொண்ட ஒரு காலகட்டத்தில் தான் அது நடந்தது. என்னவானாலும் பாரதி மீது தமிழ் தேசிய வாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் சிங்கள தீவு என்று கூறியதில் சொல்லொணா ஆத்திரமுண்டு . ஆனால் என்ன செய்வது பாரதியை , அதுவும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் கவிஞனாக புகழப்படும் மகாகவி பாரதியை எப்படி விமர்சிப்பது, ஆகவே சிங்களதீவு என்று பாரதி குறிப்பிட்டதை ஒருபுறம் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர். ஆனாலும் ஒரு புலி ஊடகவியலாளர் சில வருடங்களுக்கு முன்பு இலண்டனில் உள்ள சன் ரைஸ் வானொலியில் பாரதி குறிப்பிட்ட சிங்களத்தீவு யாழ்ப்பாணத்தை -அதாவது குடாநாட்டை- குறிப்பிடவில்லை ஏனெனில் பாரதிக்கு குடாநாடு தமிழ் தேசம் என்று தெரிந்திருந்தது என்று குறிப்பிட்டதுடன் ( கிழக்கையும் மலையக மக்கள் , மேலும் சேது சமுத்திரம் தலை மன்னாரைதான் இணைக்கிறது என்பதயும் சவுகரியமாக மறந்து ) ஒரு புதிய விளக்கம் சொல்ல முற்பட்ட பேதமையை கேட்டேன் . சரி அது போகட்டும் என்றால் பாரதி சுதந்திர இந்தியாவை காணாமல் அகால மரணமடையாமல் வாழ்ந்திருக்கக் கூடாதா என்ற அங்கலாய்ப்பும் தமிழ் தேசியவாதிகளுக்கும் பிரிவினை வாதிகளுக்கும் இருந்திருக்கலாம் அல்லது இருக்கலாம். ஒரு விவாதத்துக்கு அவர் வட்டுக்கோட்டை தீர்மான காலகட்டம் வரையாவது வாழ்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் ,செல்வநாயகம் அமிர்தலிங்கம் போன்ற பிரகிருதிகள் அவரை ஒரு வழிபண்ணி “ஈழத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்று வேறு ஒரு கவிதை எழுத வைத்திருப்பார்கள். அல்லது மாறாக பாரதி அவ்வாறான கோரிக்கை விடுக்கப்படு மிடுத்து ஆத்திரமுற்று ‘ பாண்டியா ! என்னை என்னவென்று நினைத்தாய் ” (பாரதி ஆக்ரோஷம் கொள்ளும்போது பாண்டியா என்றுதான் தன்னோடு சம்பாசிப்பவரை அழைப்பாராம் ) என்று கர்சித்திருப்பார். அதுதான் போகட்டும் என்று விட்டால் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு தமிழ் பாடகர் ஐரோப்பாவிலிருந்து இயங்கும் தமிழ் வானொலியொன்றில் “சிந்து நதியின்மிசை” பாட்டை அபாரமாக பாடி அப்பாட்டின் சிங்களதீவு எனவருமிடத்தில் “சுந்தர தீவினுக்கோர் பாலமமைப்போம்” என்று பாடி வைத்தார். சுந்தரத் தீவு என்று பாடினால் ஆகக்குறைந்தது சந்தமாவது பொருத்தமாக அமையும் .பாரதியின் கவிதை வரியினை மாற்ற முனைந்த , முனையும் தமிழ் தீவிர அரசியல் நோக்கு ஒருபுறமிருக்க சுந்தரத் தீவு என்று குறிப்படுவது அழகிய தீவு என்று நன்றாக பொருள்படும் என்பதுடன் “பரடைஸ் ஐலன்ட்” (Paradise Island) எனும் சொர்க்கத் தீவுக்கு நெருக்கமான சொல்தானே!. பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டதனால் இலங்கை ஒரு சுதந்திர தீவும் தானே!!!. எப்படியாயினும் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைக்கும் தூத்துக்குடியை சேர்ந்த பாரதியின் கனவும் வெறும் கனவல்ல மெய்ப்படவேண்டிய பிரார்த்தனைக் கனவு. தூத்துக்குடியை சேர்ந்த கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் கப்பல் பயணங்களும் வெறுமனே ஒரு சரித்திர சம்பவமல்ல மாறாக திவாலாகிப்போன அவரின் கப்பல் கொம்பனியை விட அவரின் பெயரிலே உள்ள கப்பலில் பயணங்கள் செய்வதன் மூலம் அவரின் பெயரை சாதாரண மக்களின் வாய்களில் உச்சரிக்கப் பன்னபோகும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் இது. தென்னாசியாவில் இணைவு பெறும் புதிய பொருளாதர பரஸ்பர நலன்கள் மேவிய பயன்கள் இவ்விரு நாடுகளையும் இன்னமும் இறுக்கமாக இணைக்கலாம் சேதுவை மேடுறுக்கலாம் வ உ சியின் கப்பல்கள் தமிழனின் கப்பல் வரலாற்றை நினைவுறுத்தி பயணிகளை இன மத மொழி வேறுபாடின்றி சுமந்தே இணைக்கலாம்மேலும் பார்க்க

ஒருத்தனை கொன்று மற்றவனை விட்டால் தான் பிரச்சனை என்று எல்லோரையும் கொன்றுவிட்டானா சிங்களன் ?

நாகப்பட்டினம்  நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் படகுடன் மாயமானதைத் தொடர்ந்து, இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடி வருகின்றனர்.நாகை, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆறு பேர், கடந்த 28ம் தேதி நள்ளிரவு, நாகை துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் கரை திரும்ப வேண்டியவர்கள், இன்று வரை திரும்பாததால், அக்கரைப்பேட்டை மீனவர்கள் நேற்று காலை நாகை மீன்வளத் துறையினரிடம் புகார் அளித்தனர்.மீன்வளத் துறையினர் இந்திய கடற்படையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சென்னை மற்றும் மண்டபம் கடற்படை முகாமில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடும் பணி துவங்கியுள்ளது.மீனவர்கள், காற்றின் திசைமாறி வேறு பகுதிக்கு சென்று விட்டார்களா அல்லது இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனரா என தகவல் தெரியாத நிலையில், நாகை மாவட்ட மீனவ கிராமங்களில் சோகம் ஏற்பட்டுள்ளது.இலங்கை கடற்படையினரை கண்டித்து, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்களத்தின் சுதந்திர தினம்

சிங்களத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்தும்,அக்கிய நாட்டின் பொதுச்செயலாளர் பன் கி மூனின் பேர்லீன் வருகையை முன்னிட்டு தமிழீழ மக்களுக்கு நீதி கோரி யேர்மனி பேர்லீன் நகரில் எதிர்வரும் 04.02.2011 காலை 9.30 மணியிலிருந்து 11.30 மணிவரை கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதென்று யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசின் "தமிழீழ தேசிய அட்டை" அறிமுக விழாவும், முத்துக்குமாரின் 2-ம் ஆண்டு நினைவு நிகழ்வும்.














நாடுகடந்த தமிழீழ அரசின் தேசிய அட்டை அறிமுக விழாவும், முதல்கட்ட விநியோகமும் நாடுகடந்த தமிழீழ அரசினால் பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தியாகப் பேரொளி முத்துக்குமாரன் நினைவு வணக்கமும் இடம்பெற்றது.
கடந்த சனிக்கிழ்மை 29-01-2011 அன்று மாலை 7 மணிக்கு லண்டன் பிறண்ட் ஹோலில் நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்பு நிகழ்வில் பிறண்ட் நகரசபை உறுப்பினர் உட்பட தமிழ் அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மங்கள விளக்கை மாவீரரான கப்டன் இளையவளின் சகோதரன் திரு. குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ மக்களுக்காக தன்னை தீக்கிரையாக்கி உலகிற்கு உரத்துக் கூறிய உயர்ந்த மனிதனாக உலகத் தமிழர்கள் நெஞ்சங்களில் குடிகொண்டுள்ள தியாகப் பேரொளி முத்துக்குமார் அவர்களுக்கான நினைவுவணக்க நிகழ்வு முதல் நிகழ்வாக இடம்பெற்றது.
தியாகப் பேரொளி முத்துக்குமார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசின் பெண்கள் மற்றும் முதியோர் நலன் பேணல் அமைச்சர் திருமதி. பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

ஆ.ராசா கைதால் பெரம்பலூரில் வன்முறை

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஆ.ராசா 2 ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.அதிகாரினால் விசாரணை செய்யப்பட்டு புதன் கிழமை கைது செய்யப்பட்டார்.
இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆ.ராசாவின் சொந்த மாவட்டமான பெரம்பலூரில் ஆ.ராசா கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரும் வன்முறை வெடித்துள்ளது. மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன. ஆ.ராசர் ஆதரவாளர்கள் ஆங்காங்கே மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
இதில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரம்பலூரில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.