தமிழீழம்,

தமிழீழம்,

Friday, March 18, 2011

தங்கள் உயிரையே பணயம் வைத்து தங்கள் நாட்டைக் காக்கப் புறப்பட்ட ஜப்பான் மாவீரர்களான 50 பேரின் முயற்சிகளும் வெற்றி பெற அனைவரும் மனதால் வேண்டிக் கொள்ளுங்கள்.

அணு உலைகளின் வெப்பத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பணிக்கு உதவும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை 400க்கும் அதிகமாக இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அணுக்கதி வீச்சு அதிகமானதால், ஆபத்து கருதி அனைவரையும் மீளப்பெற்றுவிட்டது ஜப்பான்.

ஆனால் ஜப்பானின் அனைத்து மக்களையும் காப்பாற்ற தங்கள் உயிரையே பணயம் வைத்து மாபெரும் தியாகிகளாக 50 பேர் இப்பொழுது களத்தில் இறங்கியிருக்கின்றார்கள். இந்த ஐம்பது பேரும் நாட்டைக் காக்கும் தியாகிகளாக, தங்களுக்கு அணுக்கதிர் விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்து கொண்டே நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த 50 பேரும் இப்போ குளிர்ந்த நீரை அந்த அணுக்கதிர் மூலகத்தில் நேரடியாகக் கொட்டி குளிர வைக்க களத்தில் இறங்குகின்றனர். இது இவர்களின் சவக்குழியாகவே அமையும் என்றாலும், அவர்கள் அந்த முயற்சியில் இறங்கிவிட்டனர்.இன்னும் 48 மணிநேரத்தில் இவர்கள் மூலமாக நிலைமை கட்டுக்குள் வந்தால் ஜப்பான் தப்பும். இல்லையேல் சுடுகாடாகும்.

24 வருடங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் இருந்த �செர்னோபில்� (Chernobyl) நகரத்தில் நடைபெற்ற அணுவாலை வெடிப்பினால். அந்த நகரமே இன்று சுடுகாடாக காட்சியளிக்கிறது. அங்கு நடைபெற்ற அணு வெடிப்பை Super Core Melt Accident என்பார்கள். அந்த Super Core Melt Accident ஜப்பானில் இதுவரை நடைபெறவில்லை. அதற்கான காலக்கெடுவாக 48 மணிநேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தங்கள் உயிரையே பணயம் வைத்து தங்கள் நாட்டைக் காக்கப் புறப்பட்ட ஜப்பான் மாவீரர்களான 50 பேரின் முயற்சிகளும் வெற்றி பெற அனைவரும் மனதால் வேண்டிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment