தமிழீழம்,

தமிழீழம்,

Wednesday, May 18, 2011

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி.

தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்!


அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைதது.அரசியலில் நேர்மை,தூய்மை,அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா..?


‘’ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார்.இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..?விட்டுவிடக்கூடாது...என்று நீதிமன்றத்துக்கும் போனார்...பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்..

பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கே வெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும் நடந்தேறியது..என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி.

சரி.41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்.....

எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ...எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ...,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று த்னது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த ,மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்..ஊர் அறிய உலகறிய!

Tuesday, May 17, 2011

ஐநாவின் முன்றலில் அணிதிரளத் தயாராகும் தமிழனம் :!!:

எதிர்வரும் மே-18 புதன்கிழமை நியூ யோர்க் - ஜெனீவா ஐ.நா பீடங்களுக்கு முன்னால் அணிதிரள ஐரோப்பா - அமெரிக்கா வாழ் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.
ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த மாபெரும் ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுவருகின்றன.
கடந்த காலங்களில் ஐநாவுக்கு முன்னால் அணிதிரண்டதற்கும் இந்த ஒன்றுகூடலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
கடந்த காலங்களில் நாங்கள் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியில் இன்று எடுத்துரைத்தோம். ஆனால் இன்று நிபுணர் குழுவின் அறிக்கையே உண்மையின் சாட்சியமாக ஐநாவுக்குள்ளேயே உள்ள நிலையில் அதனை முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு எங்கள் கைகளிலும் உள்ளதென துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் தெரிவித்தார்.
இந்த ஒன்றுகூடலில் பங்கெடுப்பதற்குரிய பேருந்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
நியூயோர்க்கில் கலந்து கொள்வதற்கான பயண ஒழுங்குகளுக்கு : 416 291 7474 - 647 822 8062 - 514 400 6970 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு கனடா வாழ் தமிழர்கள் தொடர்பு கொள்ளுமாறும் ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கீழ் வருகின்ற தொடர்பிலக்கங்களோடு தொடர்பு கொண்டு பயண விபரங்களை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
பிரான்ஸ் : 06 66 90 06 08 - 06 62 36 50 07
பிரித்தானியா : 0208 470 6655 - 0791 220 6171
சுவிஸ் : 076 541 63 26 - 078 850 90 22

Monday, May 16, 2011

ஈழத் தமிழரின் கண்ணீரை துடைக்கும்வரை பட்டம் வேண்டாம்

2009 ல் ஈழத் தமிழரின் கண்ணீரை துடைக்கும்வரை பட்டம் வேண்டாம் என்று பட்டம் வாங்க மறுத்த சுமதியிடம் பெறப்பட்ட பேட்டியை மீண்டும் படிக்கும் போது எனக்குள் வேகம் வரும்... அதை அப்படியே உங்கள் முன் வைத்திருக்கிறேன்...


கடந்த 22/3/2009 தேதி அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 43 வது பட்டமளிப்பு விழா கல்லூரியில் நடைபெற்றது.மொத்தம் 288 மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைகத்தின் துணைவேந்தர் பொன்னவைக்கோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த நாடு வல்லரசாக வேண்டுமானால் இளைஞர்களின் மனதுவைத்தால் தான் முடியும் ஆக இளைஞர்கள் இந்த நாட்டின் நட்சத்திரங்கள் என பேசிவிட்டு மாணவர்களுக்கு பட்டமளித்துக்கொண்டு இருக்கும் போது அதே கல்லூரியில்Bsc(zoo) படித்து முடித்த சுமதியை பட்டமளிக்க மேடைக்கு வந்த சுமதி அழுதுகொண்டு இலங்கையில் எமது சொந்தங்கள் கொல்லப் பட்டுகொண்டிருக்கும் போது இங்கு சந்தோசமாக பட்டத்தை வாங்கி அதை கொண்டாட முடியாது எனவே எனக்கு பட்டம் வாங்க விருப்பமில்லைன்னு சொல்லிவிட்டு போக அனைவருக்கும் பேரதிர்ச்சி,

நாம் சுமதியை அரியலூர் மாவட்டம், செந்துறை ரோட்டில் 7கி.மீ உள்ள ஓட்டக்கோயில் கிராமத்தில் பெரியார் சிந்தனை உள்ள குடும்பத்தில் (அப்பா தங்க‌வேல்(57வயசு)அம்மாயில்லை, அண்ணன்செந்தில் bsc grduate) பிறந்த சுமதிக்கு 6 மாதத்துக்கு முன் தான் கொத்தவாசலை சேர்ந்த முத்தமிழ் செல்வனுக்கு திருமணம் முடிஞ்சிருக்கு.இப்ப அரியலூர் அரசு கலைக்கல்லூரியிலயே Msc(environmental secience)படிக்கிரார் அவரை மானமும், அறிவும் மனிதனுக்கும் அழகுயென வாசக்காலில் எழுதப்பட்டிருந்த, அவரின் கூரைவீட்டில் சந்திதோம்..
இன்னைக்கு 120, நேற்று 140 என போன மூனு மாசத்தில பத்தாயிரத்துக்குமெல தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிராங்க‌, தமிழர்களின் உயிரிழப்புகளை கணக்கு பண்ணிக்கிக்கிட்டேயிருக்கிறோம், இங்கயிருக்கிவங்க இளைஞர்களின் கையிலதான் நாட்டின் எதிர்காலமிருக்குன்னு சொல்லுராங்க ஆனா இங்க அப்படி எதுவுமில்லை, என் பேரை பட்டம் வாங்க கூப்பிட்டாங்க,மேடைக்கு போகும்போதே என்னால போகமுடியல, அதனால மேடையிலயே அழுதுக்கிட்டு, இலங்கையில் தமிழர்கள் கொல்லப் பட்டுகொண்டிருக்கும் போது அதற்க்கு தீர்வுகாணாது பட்டம் வாங்க விருப்பமில்லைன்னு, சந்தோசமாக பட்டத்தை வாங்கி அதை கொண்டாடமுடியாது எனவே எனக்கு பட்டம் வாங்க விருப்பமில்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.அதுக்கப்புறம் எல்லாம் முடிஞ்சி பிரின்ஸ்பால் ரூம்ல என்னை கூப்பிட்டு துனைவேந்தர்,பிரின்ஸ்பால் எல்லாம் சேர்ந்து,ரொம்ப நேரம் பேசி சர்ட்டிபிக்கட் தந்து அனுப்பிட்டாங்க எனும் போதே கண்களில் கண்ணீர் ததும்ப அங்கிருந்து விடைபெற்றோம்.

கல்லூரி நிர்வாகத்திடம் பேசினோம். முதல அந்த பொண்ணு வாங்கல அப்புறம் கடைசியா வாங்கிட்டு போயிடிச்சி என்றனர்.

முத்துக்குமார் பற்றவைத்த தீ
இன்னும் இளைஞ்ர்களின் இதயத்திலிருந்து அணையவில்லை இலங்கை தமிழருக்கு நீதி கிடைக்கும்வரை அந்த தீ அணையாது போல....


சுமதியை மீண்டும் சந்தித்தேன்.. இன்னமும் அதே துடிப்புடன் இருப்பதை கண்டு பெருமிதம் கண்டேன் அதனால் தான் இக்கட்டுரையை பிரசுரம் செய்கிறேன். சுமதி போன்ற மாணவர்களால் தான் மாற்றம் நிச்சயம்

Wednesday, May 11, 2011

கார்திகைப்பூ

எனது பெயர் கார்திகைப்பூ  எனக்கோ பல பெயர்கள் உண்டு.. காந்தல் அக்கினி கலசம் என பல நாமங்கள் உண்டு.. பண்டைய காலத்திலே எனக்கு மதிப்பு அதிகமாம்.. போர் கடவுளாம் முருக பெருமானின் மலரும் கார்த்திகைப் பூவே.... கரிகாலன் கரங்களில் மலர்ந்ததும் காந்தள் பூவே.. நான் ஒ...ற்றை விதை தாவரத்தில் இருந்து பிறந்தவள்.. இலை நுணிகள் நீண்டு சுருண்டு பற்று கம்பிகள் போல் படர்ந்து விரிவேன்.. நான் அகள் விளக்கு போல் ஆறு இதழ் கொண்டு காட்சி கொடுப்பேன்... வெண்காந்தள் செங்காந்தள் என்றும் வர்ணிப்பார்கள்.... தீச் சுவாலை போல் காட்சி அளிப்பதாள் அக்கினி கலசம் தலைச்சுருளி என்றும் அழைப்பார்.... நான் வலைந்து பற்றுவதால் கோடல் கோடை என்றும் செல்லமாக அழைப்பார்... வைத்தியர்கள் என்னை வெண் தோண்டி என்று கூறுவார்... நான்கு விரல் போலவும் சுடர் போலவும் காட்சி கொடுப்பேன்.... தமிழீழ தேசிய தலைவர் அவர்களால் நான் போற்றப்பட்டேன்... எனக்கென்று ஒரு நாடு உண்டு... கொடி உண்டு ... தேசிய கீதம் உண்டு... தலைவன் உண்டு... மக்கள் உண்டு... இப்படி என்று பல கெளரவிப்புகளுடன் தமிழீழத்தில் அவதரித்தேன்.... என்னை தமிழீழத்தின் தேசிய மலராக பிரகடணப் படுத்தப்பட்டது... நான் தேசிய கொடியின் வர்ணங்களை ஒத்தே இருக்கின்றேன்... நான் பூக்களில் காந்தள் பூவாக பிறந்ததிற்கு பெருமை கொள்கின்றேன்... மாவீரர் செல்வங்களின் கல்லறைகளை பூஜிப்பதில் பெரும் பாக்கியம்

Wednesday, May 4, 2011

05-05-2011 -தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது 35 வது அகவையை நிறைவுசெய்கிறது.

05-05-2011 -தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது 35 வது அகவையை நிறைவுசெய்கிறது. அடுத்த தலைமுறையாவது விடுதலைக்காற்றினை சுவாசிக்கவேண்டுமென்ற உயரிய நோக்கோடு - நெருப்பினில் நீராடி, வீழ்ந்து, விதையான வீரவேங்கைகளுக்கு கண்ணீர் கலந்த வீர வணக்கம்.

Tuesday, May 3, 2011

கனடாவில் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்று பாராளுமன்று செல்லும் முதல் தமிழராகத் இடம்பெற்றுள்ளார்...

கனடாவில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் கண்சவெட்டிவ் கட்சி பெரும்பாண்மை அரசை அமைத்துள்ளது. இத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்று பாராளுமன்று செல்லும் முதல் தமிழராகத் இடம்பெற்றுள்ளார் 
இரண்டு ஆண்டுகளின் முன் எம் மக்கள் கொத்துகொத்தாய் கொல்லப்பட நாங்கள் ஒரு லட்சம் தமிழர்கள் கனடிய நாடாளுமன்றத்தின் முன் திரண்டு அழுதோம். கதறினோம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட வெளியே வந்தும் பார்க்கவில்லை. இன்று இம்மாதம் முள்ளிவாய்க்கால் மனிதப...் பேரவலத்தின் இரண்டாம் ஆண்டினை நினைவுகூரும் தருணம் எங்களில் ஒருவரே நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது மகிழ்வைத் தருகிறது. ராதிகாவின் வெற்றி கனடியத் தமிழர்களின் ஒற்றுமை உணர்வின் வெற்றி.....