தமிழீழம்,

தமிழீழம்,

Sunday, October 17, 2010

தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன்

Add caption


தொப்புள் கொடியில்
உயிர்க் கொடி
ஏற்றிய தோழா
ஈழத் தமிழர்களின் முத்துக்குமரா!

இணையத்திலே உன் அழகிய
முகம் பார்த்தோம்
இதயத்திலே கருகிப் போனது
எங்கள் மனம்!

எவ்வளவு இளகிய
மனம் கொண்டவன் நீ
எங்களுக்காய்...
ஏன் கருகிப் போனாய்?

தூத்துக்குடியில்
முத்துக் குளித்தவன் நீ
சாஸ்திரி பவனில்
ஏனையா தீக்குளித்தாய்?

குடம் குடமாய்
நாங்கள் அழுது வடித்த
எங்கள் கண்ணீரில்
உன் முகமே பூக்கிறது!

எம் தமிழ்மீது
நீ கொண்ட பற்றுக்கு
எல்லையே இல்லை என்பதை
இப்படியா உணர்த்துவது!

தமிழினத் தலைவர்கள்
என்று சொல்லத் துடிக்கும்
எங்கள் தலைவர்களின்
நாக்கை அறுத்தாய் நீ!

கையாலாகாத பரம்பரை
என நினைத்தாயோ
பூவாய் இருந்தவன் நீ
புயலாய் ஏன் வெடித்தாய்?

முப்பது ஆண்டுகள்
நாம் சுமந்த வலிகள்
போதாத ஐயா
ஏனையா எரிந்து போனாய்?

பெரு வலியோடு
உனைப் பெற்ற தாயை
எந்த முகத்தோடு போய்
நாங்கள் இனிப் பார்ப்போம்

எட்டாத தூரத்தில்
வாழ்ந்தாலும்
வாகை மரம் போல
வாடிப் போய் நிற்கிறோம்

மண்ணெணையை
உன் மீது ஊற்றி
தமிழ்மண்ணைக் காக்க
ஏனையா உனைக் கொடுத்தாய்?

தமிழீழம் வாழவே
எங்களை வாழ்த்தி
உன் வாழ்வை
ஏனையா நீ அழித்தாய்?

மரணத்திடம் மண்டியிடாமல்
மண் எங்கும் ஓடுகிறோம்
மரணத்தை தேடி நீ
ஏனையா ஓடினாய்?

தமிழீழ வரலாற்றில்
முத்தான உன் பெயர்
இனி எழுத்தாணிகளின்
முதல் வரியாகட்டும்!

உன் தியாகத்தின் முன்
நாங்கள் வெறும் சருகுகளே!
தமிழகத்தின் தாய்மடியில்
கண்ணீர் அஞ்சலி செய்கிறோம்!

- வசீகரன்
நோர்வே

எழுவாய் நீ நெருப்பாய்!

எழுவாய் நீ நெருப்பாய்!


தமிழா நீ தமிழ் வாழப்
பணி ஆற்று!

தமிழல்லவா உன்னை
இயக்கும் உயிர்க்காற்று!

உறவை நீ இழக்காதே!
தமிழையே மொழிவாய்!

பிறமொழி கலக்காதே!
கலந்தால் நீ அழிவாய்!

இசைவிழா மேடையில்
தமிழிசை முழக்கு!

வசையாரும் பாடினால்...
வரலாற்றை விளக்கு!

மண்மீதில் தமிழ்ப்புலவன்
மனம் நோக விடாதே!

உண்ணாமல் அவன் வாழ்ந்தால்
உணவை நீ தொடாதே!

தமிழ்வாழ உழைப்போர்க்கு
துணையாக இருப்பாய்!

தமிழையார் எதிர்த்தாலும்
எழுவாய் நீ நெருப்பாய்!


உருவாக்கம் :காசி ஆனந்தன்

Friday, October 1, 2010

http://www.youtube.com/watch?v=6EboBSRtYKM&feature=player_embedded
இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War
Without Witness என்கிற அமைப்பு கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி
யுத்தத்தின்போது இலங்கை அரசினால் மனிதப் பேரழிவுகளும், யுத்தக்
குற்றங்களும் நடத்தப்பட்டன என்று தீவிரமாகப் பிரசாரம் செய்து செய்து
வருகின்றது.
...




மனிதப் பேரழிவுகள் மற்றும் யுத்தக்
குற்றங்கள் ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் என்று அவ்வப்போது புகைப்படங்கள்,
காணொளிகள் ஆகியவற்றை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றது.


அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரம்
என்று சுமார் நான்கு மாதங்களுக்கு முன் புகைப்படங்கள் சிலவற்றை
வெளிப்படுத்தி இருந்தது.
தற்போது அதே இளைஞன் இராணுவத்தினரால் கட்டி வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட காணொளி என்று ஒன்றை பிரசுரித்துள்ளது.

காணொளியில் சிங்கள உரையாடல்கள்
கேட்கின்றன. உதாரணமாக எத்தனை பேரைக் கொன்றிருக்கின்றாய் ? என்று
அவ்விளைஞனிடம் ஒரு கட்டத்தில் வினவப்படுகின்றமையை காணொளியில் கேட்க
முடிகின்றது.

Thursday, September 30, 2010

அம்மா?
இவ்வுலகு இருக்கும் வரை.
அப்பா?
நான் இவ்வுலகில் இருக்கும் வரை.
ஈழம்?
...அது தமிழ் தாயின் கனவு (கண்டிப்பாய் என்றோ ஒருநாள் நனவாகும்).
தமிழ்?
அது என் சுவாசம்.
வாள் ஏந்திய சிங்கமும்?
சிரிக்கிறது தமிழனை பார்த்து.
தமிழர் கைகள்
(உறவு) வலுவானால் சிங்கம் கூட பயந்தோடும்.
பிரபாகரன்?
அது எங்க குல சாமி.
அன்றைய கியுபாவிற்கு ஒரு சே குவேரா..
இன்றைய தமிழீழத்துக்கு ஒரு பிரபாகரன்.
தோல்விகள்?
இல்லாமல் வெற்றியின் சரித்திரம் எழுதப்படுவதில்லை.

விலைமாதர் கண்ணீர்.......................

எல்லா சாதியம் தீண்டுகிற எச்சில் சாதி எங்கள் சாதி.!
எல்லா மதமும் கலக்கின்ற எங்கள் மதம் மன்மதம்.!

இனிப்பு கடை நாங்கள் எல்லோருக்கும் திண்பண்டம்.!
குனிந்து வருகிற நீதிபதி, குற்றவாளியும் அடுத்தபடி.!

தனயன் நுழைய முன்வாசல்தந்தை நழுவ பின்வாசல்.!
மூடாதிருக்கும் எப்போதுமே எங்கள் வாசல்.!

நித்தம் ஒரு கணவன் குறைவில்லை
நிரந்தர கணவன் வரவில்லை
புதுமணப் பெண்போல தினம் தோறும்
பொய்க்கு இளமை அலங்காரம்.!

தத்துவஞானிகள் மத்தியிலே தசையவதானம் புரிகிறோம்
உத்தமப்புத்திரர் பல பேருக்கு ஒருநாள் பத்தினி ஆகிறோம்.!

மேடையில் பெண்கள் விடுதலை பேசியபின் வந்து
மேதையும் எங்களை தொட்டனைப்பான்
நாங்கள் ஆடைகள் கட்ட நேரமின்றிஆண்களைமாற்றிக்கட்டுகிறோம்.!

உப்பு விலைதான் எங்கள் கற்பு விலை
உலை வைக்கத்தான் இந்தநிலை.!
தப்புத்தான் விடமுடியவில்லை
தருமம் சோறு போடவில்லையே...!

உலகத்தில்
எத்தனை எத்தனை மாற்றங்கள் ஆனால் இவர்களின் மற்றம்??? எப்பொழுது ஒரு மனிதன்
அன்புக்கு அடிமைப்படாமல் காமத்துக்கு அடிமைப்பட்டால் இது தொடர் கதைதான்.
இதை பார்த்துகொண்டு இருக்கும் இந்த நிமிடம் முதல் உலகத்தில் எங்கயோ ஒரு
முலையில் இந்த சமூகத்தாலும், காம அரக்கர்களாலும் ஒரு விலைமாது
உருவாகிக்கொண்டுதான் இருக்கிறாள். இந்த உலகத்தில் இதை மாற்று வதற்கும்
வழியுண்டு அந்த முன்று எழுத்துக்களால் மட்டுமே இதை மாற்ற முடியும்.
"அன்பு" ஒவ்வொரு உயிர் மேலயும் அன்பு செலுத்துவோம்


உங்கள் கருத்துக்கள் எதிர்பார்கிறேன்..உங்கள் கருத்துக்கள் தான் மலர் வளர்வதுக்கான உட்டச்சத்து.
நன்றி :கவிதைகள் தென்றல் வாரந்திர பத்திரிகை

Wednesday, September 15, 2010

இரத்தினபுரியில் பதற்றம்!

நிவித்திகலையிலுள்ள தேல குக்குலகலைத் தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினக் காவற்காரர் ஒருவர் கரவிட்ட திமியாவ என்னுமிடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீடுகள் தீக்கிரைக்கப்பட்டன எனவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருள்கள் சூறையாடப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
குக்குலகல பகுதியிலுள்ள பெரும்பான்மையினத் தோட்டக்காவலர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போனதைத்தொடர்ந்து அவர் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்திலுள்ள தமிழர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த தோட்டத்தின் மேற்பிரிவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவமொன்றில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் காயத்துக்கு உள்ளாகியுள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்தே தமிழர்களின் இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதனையடுத்து தோட்டங்களைச் சேர்ந்த 100 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்துள்ளன. இந்த நிலையில் பிரதேசத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tuesday, September 14, 2010

மகனின் திருமணத்தையொட்டி பாதிக்கப்பட்ட மக்களில் பத்துக் குடும்பங்களுக்கு சுமார் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான கோழிக்கூடுகளை வழங்கி வர்த்தகர்களில் முன்னோடி நடவடிக்கையொன்றை சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த வர்த்தகரான எஸ்.மகாதேவன் மேற்க்கொண்டுள்ளார்.

மகனின் திருமணத்தையொட்டி பாதிக்கப்பட்ட மக்களில் பத்துக் குடும்பங்களுக்கு சுமார் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான கோழிக்கூடுகளை வழங்கி வர்த்தகர்களில் முன்னோடி நடவடிக்கையொன்றை சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த வர்த்தகரான எஸ்.மகாதேவன் மேற்க்கொண்டுள்ளார்.

பத்துக்கோழிக் கூடுகள் வறுமையான பெண்களை குடுடும்பத் தலைவிகளாகக் கொண்ட படிக்கும் பிள்ளைகள் உள்ள பத்துக் குடும்பங்களுக்கு கோழிக் கூடுகள் வழங்கப்பட்டுள்ளன.

கோழிக் கூடுகள் உடுவில் பிரதேச அலுவலாகள் முன்னிலையில் வைத்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த பணியை ஏனைய பணம் படைத்தவாகளும் மேற்க்கொள்வதன் மூலம் யாழ்ப்பாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பல இளம் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கான வசதிகளை ஏற்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றாhகள .

Wednesday, September 8, 2010

உயர்ந்தவர்களிடம் மட்டுமே காணக்கூடிய இலட்சிய உறுதி அது!

  • தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய எழுச்சி கொண்டதும், வளர்ச்சி கண்டதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்தான்! இங்கே தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருக்கிற இயல்பு, அடக்குமுறைகளுக்கு - அவை எவ்வளவுதான் பெரிதாக, பிரமாண்டமாக இருந்தாலும் - விட்டுக் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் பாரிய இழப்புக்களைச் சந்தித்தாலும், தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை என்பது தேசியத் தலைவரின் அடிப்படை இயல்பாகும்!
இந்த இயல்புத் தன்மைதான் தமிழீழத் தேசியத் தலைவரையும் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க, முன்னர் தூண்டியது. 1986ம் ஆண்டு, நவம்பர் மாதத்தின்போது, இந்தியாவில் தமிழ் நாட்டிலிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை இந்திய அரசு பறிமுதல் செய்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராகத் தலைவர் கடும் சினம் கொண்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு போராட்ட வடிவமாக, சாகும் வரையிலான உண்ணா நோன்பைத் தேசியத் தலைவர் பிரபாகரன் உடனே ஆரம்பித்தார். இந்தச் சாகும் வரையிலான உண்ணா நோன்பு ஒரு போராட்ட வடிவமாகத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவரால்தான் முதன்முதலில் செய்யப்பட்டது.

அப்போது நடைபெற்ற சில விடயங்களை, நாங்கள் இப்போதும் நெஞ்சில் நிலைநிறுத்திக்கொள்ளுவது வரலாற்றுக்கடனாகின்றது.

தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார். இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒரு நாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். “அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே” - என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய பதில் இதுதான்:

“இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ண்Pர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!”

ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தான் பறித்தெடுத்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றைத் தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அரசு கொண்டு வந்து தந்தது. தலைவர் தன்னுடைய உண்ணா நோன்பை முடித்தார்.

  • தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைக்குப் பணிவதில்லை என்கின்ற தேசியத் தலைவரின் இயல்பின் வெளிப்பாடுதான் திலீபனிடமும் உள்ளூரப் படிந்திருந்தது. தேசியத் தலைவர் தானே முன்னின்று வழிகாட்டிய பாதையில், திலீபன் பின் தொடர்ந்து போராடினான். திலீபனின் இந்த உண்ணா நோன்புப் போராட்டம், தமிழீழத் தேசியத் தலைவரின்; இயல்பையும் குறியிட்டுத்தான் நிற்கின்றது!
இந்த இலட்சிய உறுதிதான், தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் - 1987ல் - நடாத்தினான். “ஒரு சொட்டுத் தண்ண்Pர் அருந்தாமல், நான் எனது உண்ணா நோன்பை ஆரம்பிக்கப் போகின்றேன்” - என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் திலீபனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். “தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தைத் தொடரலாம்”- என்று தலைவர் பிரபாகரன் திலீபனைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் திலீபனோ, தலைவரிடமே பதில் கேள்வி ஒன்றைக் கேட்டான். “அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல்தானே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தீர்கள். என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீர்கள்?”

அத்தகைய ஒரு தலைமை! இத்தகைய ஒரு தியாகி!.

உயர்ந்தவர்களிடம் மட்டுமே காணக்கூடிய இலட்சிய உறுதி அது!

திலீபனின் வரலாற்று உரை

தியாகி திலீபனின் இருபத்தியிரண்டாவது ஆண்டு நினைவுத் தினம் நெருங்கி வருகின்ற இந்த வேளையில், அந்த மாவீரனின் தியாகம் நமக்குச் சொல்லிச் சென்ற, இன்னமும் சொல்லி வருகின்ற செய்தியின் உண்மையை, நாம் மீண்டும் ஒருமுறை எம் நெஞ்சங்களில் உள்வாங்கிச் சிந்திப்பது அவசியமானதாகும்! 
எமது நாட்டில்
எமது ராணுவம்
நிலைபெறும்
வரை எமது நாட்டில்
நாம் நிலைபெறும்
...வரை எமது சுதந்திரத்தை எவரும்
உறுதிப்படுத்த
முடியாது

""மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்""

Saturday, September 4, 2010

தமிழகம் இட்ட ஆணி.

தமிழகம் இட்ட ஆணி..

சிறீலங்கா இட்டது சிறு ஆணி - அப்போதும்
சிந்தை கலங்கவில்லை

ஐரோப்பா இட்டது ஐந்தாறு ஆணி - அப்போதும்
ஐயோவென்று அழவில்லை

அமேரிக்கா இட்டது ஆறேழு ஆணி - அப்போதும்
அச்சம் எழவில்லை

சீனா இட்டது சில ஆணி - அப்போதும்
சிறிதும் வாடவில்லை

இந்தியா இட்டது இரும்பாணி - அப்போதும்
இதயம் நோகவில்லை

பாகிஸ்தான் இட்டது பல ஆணி - அப்போதும்
பயந்து போகவில்லை

தமிழகம் இட்டது தனி ஆணி - அப்போது
தொலைந்தது எம்மூச்சு

Friday, September 3, 2010

பரந்தனுக்கு வந்து பாருங்கள்

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை? -

'பரந்தனுக்கு வந்து பாருங்கள்' என்று அழைத்தார் ஒரு நண்பர். அவர் ஒரு விவசாயி. பரந்தனில் உழைத்து பரந்தனிலேயே வாழ்ந்தவர். பரந்தனையும் தன் பங்குக்குக் கட்டியெழுப்பியவர்.

'பரந்தனில் அப்பிடி என்னதானிருக்கு?' என்று கேட்டேன்.

'அங்கேயிருந்த ரசாயனப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை இல்லை. நகரின் மத்தியிலிருந்த கடைத் தொகுதி இல்லை. சந்தை இல்லை. தண்ணீர்த்தாங்கி இல்லை. ஆயிரக்கணக்கில் நின்ற மாடுகள் இல்லை. குமரபுரத்துக்குத் திரும்புகிற சந்தியிலிருக்கும் வைரவர் கோவில் இல்லை. ரெயில்வே ஸ்ரேசன் இல்லை. சனங்கள் ஒருவருக்கும் வீடுகளில்லை. பலருக்குக் கைகால்களில்லை. சிலருக்குக் கண்கள் இல்லை. நல்ல தெருக்கள் இல்லை. மின்சாரமில்லை. யாரிடமும் ஒரு வண்டியோ வாகனமோ கிடையாது....'

இப்பிடியே அடுக்கிக் கொண்டு போனார் நண்பர்.

'அப்பிடியென்றால் இப்ப அங்க என்னதானிருக்கு?' என்றேன்.

'பரந்தனில் உடைந்து நொருங்கியிருக்கும் தண்ணீர்த்தாங்கியிருக்கு. செத்துப் போன நூற்றுக்கணக்கான மாடுகளின் எலும்பு எச்சங்கள் இருக்கு. கைகால்களை இழந்து போனவர்கள் இருக்கினம். கடனாளியள் பைத்தியமாகியவர்கள்இ அநாதைகள் எல்லாரும் இருக்கினம். அதிலும் இரண்டு கால்களையும் இழந்தவர்கள்இ இரண்டு கைகளையும் இழந்தவர்கள் எல்லாம் இருக்கினம். தாயையும் தகப்பனையும் இழந்து ஆரோட வாழுறதெண்டு தெரியாத பிள்ளையள் இருக்கு. தரப்பாள் கூடாரங்கள் இருக்கு. சந்தியில புத்தர் கோயில் இருக்கு. ஆமிக்காம்புகள் இருக்கு. சந்தியில ஆமிக்காரர் நடத்திற ஐஞ்சாறு கடையள் இருக்கு. வெளிச்சமில்லாத இரவுகள் இருக்கு. (இருட்டிருக்கு). விதைக்கப்படாத வயல்கள் இருக்கு. எல்லாரிட்டையும் தாரளமாகக் கண்ணீர்க் கதைகள் இருக்கு. சாப்பாடில்லாத நாட்கள் இருக்கு. ஆமிக்காரரின்ர புலன் விசாரணைகள்இ கண்காணிப்புகள் எல்லாம் இருக்கு. பூசையே இல்லாத கோயில்களிருக்கு. அழகான விளம்பரத் தட்டிகள் இருக்கு. இயக்கத்தின்ர அடையாளங்களாக சிதைந்து போன எச்சங்கள் இருக்கு. முல்லைத்தீவுக்குத் திரும்புகிற சந்தியில லெப் கேணல் குட்டிசிறியின்ர நினைவாகச் செய்யப்பட்ட சிலையின்ர இடிக்கப்பட்ட சிதைவுகளிருக்கு...'

நண்பர் முடிக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால்இ எனக்கு மூச்சுத்திணறியது. இந்தமாதிரி இப்ப அநேகமான வன்னிக் கிராமங்கள் இருக்கெண்டு எனக்குத் தெரியும். ஆனால்இ அதையெல்லாம் இப்பிடித் தொகுத்து நண்பர் சொல்லேக்க அதைத் தாங்கேலாமல் கிடக்கு.

இந்தப் பூமியில ஒண்டும் புதுசா இல்லை. எல்லாமே ஏற்கனவே அறிஞ்சதுதான். ஆனால்இ திரும்பச் சொல்லுற விதத்தாலதான் அவையெல்லாம் புதுசாஇ அர்த்தம் தாறமாதிரி இருக்கு.

இந்தப் பூமியில அநீதிஇ அக்கிரமம்இ கொடுமைஇ அழிவுகள்இ போர்இ அதின்ர இழப்புகள் எல்லாமே புதிசில்ல. அது எல்லாக் காலத்திலயும் எங்கோ ஒரு இடத்தில நடந்து கொண்டுதானிருக்கு.

'மனிசர் நாகரீகம் அடைஞ்சிருக்கினம். உலகம் முன்னேறியிருக்கு' எண்டெல்லாம் சொல்லப்படுது. இந்தப் பூமியில அமைதியைப் பற்றிஇ சமாதானத்தைப் பற்றிக் கதைக்கிற கதைகள் கொஞ்சமில்லை. ஆனால்இ கொடுமைகளும் ஆரும் விரும்பாத போரும் நடந்து கொண்டுதானிருக்கு.

இப்ப எங்களின்ர மண்ணில நடந்த போரால சனங்கள் பட்டிருக்கிற பாடுகள்இ அதுகள் சந்திச்சுக் கொண்டிருக்கிற துன்பங்கள் எல்லாம் கொஞ்சமில்ல.

பரந்தனில முந்தி நெல்மணந்தானிருக்கும். அதோட கலந்து சோடாப்பக்ரறி எண்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின்ர குளோரின் மணமும் இருக்கும். பச்சைப் பசேல் என்ற நெல்வயல் ஏக்கர்கணக்கில கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியும். மாடுகளின்ர கூட்டம். நெல்லவிக்கும் மணம். நெல்லுக் குத்தும் மில்கள். சந்தையில இருக்கிற பரபரப்புஇ இரவோ பகலோ என்று தெரியாத வெளிச்சம்இ குமரபுரம் முருகன் கோவில்இ பரந்தன் வைரவர்இ சோடாப்பக்ரறிப் பிள்ளையார் கோவில்கள் எல்லாத்திலையும் கேட்கிற மணியோசை இருக்கும். சோடாப்பக்ரறிக்கு வேலைக்கு வாற ஆட்கள்இ வேலை முடிஞ்சு போற ஆட்கள்இ அரசியல் கூட்டங்கள்இ கட்சிக் கொடிகள்இ பிறகுஇ இயக்கங்களின்ர காலத்தில போராளிகளின்ர நடமாட்டம் எல்லாம் இருந்தது.

இப்பஇ அது சுடுகாடு. கற்குவியலாகிஇ கண்ணீர் மேடாகிஇ காய்ந்த நிலமாகிஇ சப்பாத்துகளின் விளைநிலமாகியிருக்கும் இடிபாடுகளின் காடு.

இந்தச் சுடுகாட்டில இருக்கிற நூற்றுக்கணக்கான துயரப்படுகிற மனிசரில இப்ப ஒருத்தியின்ர கதை இது. இதை என்னைப் போல அங்கே இப்ப புதிசா ஒரு விருந்தாளியாக வந்திருக்கிற புத்தர் பெருமானும் அறிஞ்சிருப்பார் எண்டு நினைக்கிறன்.

இந்தப் பெண்ணுக்கு – பிள்ளைக்கு – வயசு 20. வயதுக்கேற்ற தோற்றம் இல்லை. கண்களில் மகிழ்ச்சியில்லை. வாடி ஒடுங்கிய தேகம். பெயர்இ சுப்பிரமணியம் நித்தியகலா. இப்ப பரந்தன் - முல்லைத்தீவு றோட்டிலஇ நாலாம்குறுக்குத் தெருவில இருக்கிற 99 ஆம் இலக்க வீட்டில (அது தரப்பாள் கூடாரம்) ஒரு குடும்பத்தோட இருக்கிறாள்.

நித்தியகலாவின் வீடு முன்பு கிளிநொச்சி அம்பாள் குளத்தில் இருந்தது. இப்ப அவள் அங்கே போகமுடியாது. அவளுக்கு யாருமே இல்லை. இந்த நிலையில் அவள் எப்பிடி அங்க போயிருக்க முடியும்?

இனம் இனத்தோடதான் சேரும் என்பார்கள். இவளும் இவளைப் போல பாதிக்கப்பட்டிருக்கிற ஒரு குடும்பத்தோடதான் இருக்கிறாள். அது அழகேஸ்வரியின்ர வீடு. அழகேஸ்வரியின்ர கணவர் செல்லடியில செத்துப்போனார். அழகேஸ்வரிக்கு இரண்டு பொம்பிளைப் பிள்ளையள். இப்ப மூண்டாவது பிள்ளையாக நித்தியகலாவைத் தன்னோட வைச்சுப் பார்க்கிறார் அழகேஸ்வரி.

அழகேஸ்வரி நித்தியகலாவை வவுனியா அகதி முகாமில சந்திச்சிருக்கிறார். நித்தியகலாவுக்கு ஒரு சொந்தக்காரரும் இல்லை. எல்லாரும் 17.05.2009 ஆம் திகதிஇ யுத்தம் முடிவுக்கு வந்த நாள் வட்டுவாகலில் செத்துப் போனார்கள்.

நாலு அண்ணன்மாருக்கு கடைசிப் பெண்ணாகஇ செல்லக்குட்டியாக இருந்த நித்தியகலா இப்ப அநாதை. கைஇ கால்இ முதுகெல்லாம் காயப்பட்ட தழும்புகள். மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கிறாள்.

நித்தியகலாவின் சொந்தக்காரர்கள் 27 பேர் அன்று செத்திருக்கிறார்கள். யுத்தம் முடியும் தறுவாய். எப்படியோ அந்த இறுதிக் கணங்களைக் கடந்து விட்டால் போதும். பிறகு சமாளித்துக் கொள்ளலாம் எண்டுதான் எல்லாரும் இருந்தார்கள்.

ஆனால்இ அப்பஇ அந்தக் கடைசிநாளின் கடைசிக் கணங்களில் வந்து விழுந்த செல் ஒரேயடியாய் அத்தனை பேரையும் ஒண்டாத் திண்டிருக்கு. அவள் தன்னுடைய செத்துப் போன சொந்தக்காரரின்ர பேரைச் சொல்கிறாள்.

'எனக்கு நாலு அண்ணமார். நித்தியானந்தன். நித்தியரூபன். நிஸாந்தன். நிரூபன் எண்டு. ஒருத்தர் போராளியாக இருந்து வீரச்சாவடைந்திட்டார். மற்ற அண்ணன்மார் எங்களோடதான் இருந்தவை. நாங்கள் எல்லாரும் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து வட்டுவாகல்வரையும் போட்டம். அதுவரையும் சின்னச்சின்னக் காயங்கள்தான் பட்டம். ஆனால்இ ஆருக்கும் உயிருக்கு ஒண்டுமில்லாமல் இருந்துது.

நாங்கள் எல்லாரும் ஒண்டாகத்தான் இருந்தம். அம்மம்மாஇ அப்பப்பாஇ சித்தப்பா குடும்பம்இ அத்தையாக்கள்இ மாமா குடும்பம் எண்டு எல்லாரும். வட்டுவாகலில கடைசியா இருக்கிறம். ஆமி எல்லாரையும் சுத்தி வளைச்சுப் போட்டுது எண்டு சொல்லிச்சினம்.

எல்லாப்பக்கமும் வெடிச்சத்தம். தலையெடுக்கேலாது. எனக்கு திசை ஒண்டுந் தெரியேல்ல. பழக்கமில்லாத இடம். சனங்கள் செத்துக் கொண்டிருந்துதுகள். எல்லாப் பக்கத்தாலயும் அழுகுரல்கள் கேட்டுக் கொண்டிருந்துது.

நாங்கள் அழுதம். இயக்கமும் ஆமியளும் மாறிமாறிச் சுட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன செய்யிறது? கொஞ்சநேரம் பாப்பம் எண்டு சின்னண்ணா சொன்னான். அப்பிடியே இருக்கிறம். நிலைமை மாறேல்ல. சனங்கள் செத்துக் கொண்டிருந்துது. அதைப் பாக்கப் பயமா இருந்துது. எனக்கு தலை சுத்திக் கொண்டு வந்திது.

அத்தை சரியாப் பயந்தவா. அவ மயங்கியே விழுந்திட்டா. ஒழங்கான பங்கரும் இல்ல. என்ன செய்யிறது? நடக்கிறதக் காணவேண்டியதுதான்...

அப்பதான் அந்தச் ஷெல் விழுந்தது.....

..........'

அழுகை நிற்கவில்லை.

நித்தியகலா விம்மி விம்மி அழுகிறாள். 27 பேரைஇ அவளுடைய குடும்பத்தில இருந்த நெருங்கிய சொந்தக்காரர்கள் அத்தனை பேரையும் விழுங்கியிருக்கு அந்தச் ஷெல். அவளை அநாதையாக்கியிருக்கு அந்தச் ஷெல்.

இப்ப அவள் தனிமரம். அழகேஸ்வரி எண்ட துக்கமறிந்த இன்னொரு உறவைத்தவிர அவளுக்கு வேற ஆருமேயில்லை.

பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டாள் நித்தியகலா. இப்ப துக்கத்தைத் தின்றே காலத்தைக் கழிக்கிறாள். அவளுக்கு எப்பவும் அம்மம்மாவில நல்ல விருப்பம். அம்மம்மாவுக்கும் அவளில உயிர். ஆனால்இ விதி அவளுக்கு முன்னேயே அம்மம்மாவைக் கொன்றிருக்கு.

அவள் அழுகை ஓயச்சொன்னாள்.

'அம்மம்மா எனக்கு முன்னால செத்ததை என்னால மறக்கேலாமக்கிடக்கு...' அழுகிறாள். '........ அதப் போல அத்தையின்ர பிள்ளையள்... மாமாவின்ர பிள்ளையள்.... எல்லாம் சின்னப் பிள்ளையள்....'

அவளிடம் விவரம் கேட்டேன்.

சொன்னாள்.

அப்பா வீரய்யா சுப்பிரமணியம்இ அம்மா சுப்பிரமணியம் இராஜேஸ்வரிஇ அப்பப்பா அழகன் வீரய்யாஇ அப்பம்மா வீரய்யா பார்வதிஇ சித்தப்பா வீரய்யா ரெங்கசாமிஇ அம்மம்மா லட்சுமிஇ அத்தை மங்கையற்கரசிஇ மாமா அழகுதேவன்இ மாமாவின் பிள்ளைகள் சுதாகரன்இ விஜயாஇ பெரியய்யா இராமசாமிஇ பெரியம்மா பாலசரஸ்வதிஇ அவர்களின் பிள்ளைகள் மோகனரூபிஇ மோகன தர்சினிஇ அத்தை நகுலாஇ மற்ற மாமா தவரூபன்இ அவர்களின் பிள்ளைகள் தசீபன்இ தரூபாஇ இன்னொரு அத்தை மங்களேஸ்வரிஇ பிள்ளைகள் ரஜீவன்இ ரஜீஇ சுஜீபாஇ சஜீபன்இ சஜீபாஇ பெரியம்மாவின் மகன் சஜீவன்....

இப்பிடியொரு நீண்ட பட்டியல்.

அங்கே இறந்த எல்லாற்ற பெயரையும் அவளால் சொல்ல முடியவில்லை. துக்கம் அவளுடைய குரலைத் தடுத்து விட்டது. அதற்கு மேல் அவளால் எதுவும் சொல்ல முடியாது.

நித்தியகலாவுக்கு ஒரு சைக்கிள்கூட இல்லை. ஆஸ்பத்திரிஇ கடைஇ சந்தைஇ கோவில் என்று எல்லா இடத்துக்கும் நடந்தே போறாள். அவளால் நீண்ட தூரத்துக்கு நடக்க முடியாது. காலில் இன்னும் எடுத்து அகற்ற வேண்டிய ஷெல்லின் ஈயச் சிதறல்கள் இருக்கு.

அழகேஸ்வரி நித்தியகலாவை பிள்ளையாகவே பார்க்கிறார். நித்தியகலா அழகேஸ்வரியின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கிறாள். தண்ணீரை எடுப்பதற்காக நாலு காணி தள்ளிப் போய் எடுத்து வருகிறாள். வீட்டில் வேலை செய்கிறாள்.

அவளைப் போல அம்மா அப்பா சகோதரர்களை இழந்து அயலில் அம்மம்மாவுடன் இருக்கும் இன்னொரு 16 வயதுப் பிள்ளையுடன் தோழியாகியிருக்கிறாள். அவளுடன் கூடுதலான நேரத்தைப் போக்குகிறாள். இருவரும் அந்தக் காய்ந்த வயல் வெளிகளில் பின்னேரங்களில் நடந்து திரிகிறார்கள். தங்களுக்குள் இருக்கும் கொதிக்கும் நினைவுகளை அவர்கள் பரிமாறிக் கொள்ளக்கூடும்.

இந்த இரண்டு பிள்ளைகளைப் போல பரந்தனில் இன்னும் பலர் இருக்கினம். அதிலும் கைகள் இல்லாமல்இ கால்கள் இல்லாமல் இருக்கிறவையின்ரை கதைகள் ஆகக் கொடுமை.

என்ன செய்வது? பூமியில் எத்தனை தலைமுறைகளாக யுத்தம் நடந்து கொண்டிருக்கு? அநீதிக்கும் நீதிக்குமிடையிலான போர் என்ற ஒரு விதியில் எத்தனை துயர விளைவுகள் இப்படி?

இதைப்போல இன்னும் எத்தனை தலைமுறைகள் அழியப் போகின்றன? எவ்வளவு பேர் அநாதரவாகத் திரியப் போகிறார்கள்? எங்கே இதற்கான முடிவுப்புள்ளி?

நித்தியகலா இப்ப அந்த இருட்டுக் கிராமத்துக்குள் என்ன செய்து கொண்டிருப்பாள்? யாரையெல்லாம் எதையெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பாள்?

தந்திரத் தமிழீழம் ஒரு தோற்கடிக்கப்பட்ட அரசியல் இலக்கு அல்ல. பல்லாயிரக்கணக்கான மாவீரர்களதும் மக்களதும் குருதியாலும் ஈகத்தாலும் உயிர்ப்பூட்டப்பட்ட விடுதலைத்தீ நாம் நமக்கெனத் தமிழீழத் தனியரசினை அமைக்கும்வரை எம் நெஞ்சமெல்லாம் கனன்று கொண்டுதான் இருக்கும். இவ் விடுதலைத்தீயினை அணைத்துவிடுவதற்கு எதிரி பகீரத முயற்சி செய்து வருகின்றமை நாம் அறிந்ததே. எதிரியிடம் இருந்து நம் விடுதலைத்தீயினை பாதுகாப்பதனையும், எமது விடுதலை இலக்கினை முன்னோக்கி நகர்த்துவதனையும் சவால்களாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணிகளை முன்னெடுக்க உறுதி பூண்டுள்ளது.” இவ்வாறு நாடுகடந்த அரசின் இடைக்கால முதன்மை நிiறேவேற்றுனர் விஸவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக அவர் வெளயிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆந்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு… கடந்த மே மாதம் 17-19 ஆம் நாட்களின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் முதலாவது அமர்வினை அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட, சுதந்திரப் பிரகனடம் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க பிலடெல்பியா மாநகரில் நாம் கூட்டியிருந்தோம். இம் முதல் அமர்வின்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனக்கான இடைக்கால நிறைவேற்றுச் சபையினை அமைத்துக் கொண்டதுடன், இடைக்கால முதன்மை நிறைவேற்றுனரையும் தெரிவு செய்து கொண்டது. மேலும் இம் முதலமர்வு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அரசியல் அமைப்பினை உருவாக்கிக் கொள்வதற்காகவும், உடனடித் தேவைகளையொட்டிய பணிகளை முன்னெடுப்பதற்காகவும் சில செயற்பாட்டுக் குழுக்களை அடையாளம் கண்டு உருவாக்கியிருந்தது. அரசியல் அமைப்பு விவகாரக்குழு, அரசியல் அமைப்பு உபகுழு, கல்வி, பண்பாடு;, உடல்நலம்;, விளையாட்டுத் துறைகளுக்கான குழு, பொருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக்கான குழு, அனைத்துலக ஆதரவு திரட்டலுக்கான குழுவிற்கான புலமையாளர் உபகுழு, ஆதரவுதிரட்டல் உபகுழு, ஊடகங்கள் உபகுழு, இனஒழிப்பு, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கான குழு, பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணும் குழு, வர்த்தக மேம்பாட்டுக் குழு, மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணும் குழு, போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு, இயற்கை வளங்கள் மேம்பாட்டுக் குழு, இடம் பெயர்ந்தோர் ஏதிலிகள் பற்றிய குழு ஆகியவையே இக் குழுக்களாகும். நாம் அமைத்துள்ள வௌ;வேறு குழுக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒவ்வொரு குழுவுக்கும் ஒருங்குகூட்டுனர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேலைத்திட்டங்களுக்கான திட்டமிடல் ஆரம்பிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதேவேளையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு அரசியலமைப்புக் குழுவினால் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் அரசிலமைப்பை விவாதித்து ஏற்றுக் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்பை வடிவமைப்பதே இம்மாத இறுதிப் பகுதியில் கூட்டப்படவுள்ள அரசவையின் இரண்டாவது அமர்வின் நோக்கமாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது நிரந்தரக் கட்டமைப்பை உருவாக்கும்போது செயற்பாட்டுக் குழுக்கள் அமைச்சுக்களாக வடிவமைக்கப்பட்டு நிரந்தரக் கட்டமைப்புக்களாக்கப்படும். இவ் இரண்டாவது அமர்வு தொடர்பான மேலதிகத் தகவல்களை மக்களுக்கு இயன்றளவு விரைவில் அறியத் தருவோம். இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் என்ற நிலையில் இருந்து மக்கள் முன்னால் ஒரு சில விடயங்களைத் தெளிவுபடுத்துவது எனது தலையாய கடமையெனக் கருதுகிறேன். நாம் எமது அரசியல் பெருவிருப்பான சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான போராட்டத்தை அரசியல் இராஜதந்திரத் தளத்தில் முன்னெடுப்பதற்காகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கியுள்ளோம். தாயகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த எழுச்சி மிகுந்த விடுதலைப்போராட்டத்துக்கு உறுதுணையாக நாம் முன்னர் விடுதலைப்பணிகளை மேற்கொண்டு வந்தோம். தற்போது தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அரசியல் வெளியெதுவும் தாயகத்தில் இல்லாதமையால் புலத்தில் வாழும் தமிழீழ மக்களாகிய நாம் உலகத் தமிழினத்தின் பங்குபற்றுதலுடன், நியாயத்துக்காகவும், ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய உலக சமூகத்தின் ஆதரவுடன் எமது விடுதலைப் போராட்டத்தை அரசியல் இராஜதந்திரத் தளத்தில் முன்னெடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம். நமது செயற்பாடுகள் தாயக மக்களின் அரசியல் வெளியையும் அதிகரிக்க உதவும் எனவும் நாம் உறுதியாக நம்புகிறோம். எம்மைப் பொறுத்த வரையில் சுதந்திரத் தமிழீழம் ஒரு தோற்கடிக்கப்பட்ட அரசியல் இலக்கு அல்ல. பல்லாயிரக்கணக்கான மாவீரர்களதும் மக்களதும் குருதியாலும் ஈகத்தாலும் உயிர்ப்பூட்டப்பட்ட விடுதலைத்தீ நாம் நமக்கெனத் தமிழீழத் தனியரசினை அமைக்கும்வரை எம் நெஞ்சமெல்லாம் கனன்று கொண்டுதான் இருக்கும். இவ் விடுதலைத்தீயினை அணைத்துவிடுவதற்கு எதிரி பகீரத முயற்சி செய்து வருகின்றமை நாம் அறிந்ததே. எதிரியிடம் இருந்து நம் விடுதலைத்தீயினை பாதுகாப்பதனையும், எமது விடுதலை இலக்கினை முன்னோக்கி நகர்த்துவதனையும் சவால்களாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணிகளை முன்னெடுக்க உறுதி பூண்டுள்ளது. எமது இரண்டாவது அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டபின்னர் நமது பணிகள் வேகம் பெறும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிரியிடமிருந்து வரும் சவால்களை முறியடித்து, நமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ள இக் காலகட்டத்தில் நாம் எமக்குள்ளேயே முரண்படுவதும், ஆளுக்காள் அவதூற்றுச்சேறு வீசுவதும் எதிரிக்குத் துணைபோகும் நடவடிக்கைகளேயன்றி நம் இலட்சியத்துக்கோ அல்லது நமது விடுதலைப்பயணத்துக்கோ எவ்விதத்திலும் உதவும் நடவடிக்கைகள் அல்ல. இந்த அவதூறுகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மீதும், அதன் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனராகப் பணிபுரியும் என் மீதும் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் தமது சொந்த நலன்கள் சார்ந்து மேற் கொள்ளும் கைங்கரியம் இது என்பதனை நாம் அறிவோம். நாம் அனைவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஜனநாயக விழுமியங்களில் கருத்துச் சுதந்திரம் முக்கியமானது. ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எமது பணியைச் செழுமைப்படுத்தும். ஆனால் உண்மைக்குப் புறம்பான அபாண்டங்களை உண்மை போல் திருப்பி திருப்பிக் கூறுவதும், மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்திக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைவதும் போராட்டத்தின் நலன் சார்ந்த அல்லது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் அல்ல. அண்மையில் தமிழீழத்துக்கு எதிராக நான் கருத்துச் சொல்லியுள்ளதாகவும், சிறீலங்கா அரசுக்காகச் செயற்படுவதாகக் கூறியுள்ளதாகவும் அபாண்டங்கள கூறி நான் கதைத்ததாகக் கூறும் ஒலிப்பதிவு உலவ விடப்பட்டு கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து மக்களுக்கு உண்மையினைத் தெளிவுபடுத்த வேண்டியது மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்க அவசியமானது என உணர்கிறோம். தமிழ் ஈழம் சாத்தியமானதல்ல என நான் என் வாழ்நாளில் எவருக்கும் கூறவும் இல்லை, நான் அப்படிக் கருதவும் இல்லை. தமிழ் ஈழம் சாத்தியமானது மட்டுமல்ல, அது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயம் என்ற அடிப்படையில் தான் எனது கடந்த கால, தற்போதய அரசியல் வேலைப்பாடுகள் அமைந்திருந்தன, அமைந்து வருகின்றன. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலண்டனில் இருந்து கதைப்பதாகக்கூறி சுரேந்திரன் எனும் பெயரில் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய இவருடன் நான் மேற்கொண்ட உரையாடல் எனக்குத் தெரியாமலே பதிவு செய்யப்பட்டு, அதனை இடையிடையே வெட்டி ஒட்டி மோசடியான முறையில் திரிபுபடுத்தப்பட்ட கதையொன்று சோடிக்கப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். தமிழீழத்துக்கான போராட்ட வடிவம் மாறியுள்ளமை குறித்தும், எமக்கிடையே நடைபெறும் சேறுபூசும் நடவடிக்கைகள் ஊடாக சிறீலங்கா அரசு செய்யும் வேலைகளை நாமும் செய்கிறோம் என்று கண்டனம் வெளிப்படுத்தியும் நான் தெரிவித்த கருத்துக்களை, கணினி மென்பொருளைப் பயன்படுத்தி உரையாடலின் சில பகுதிகளை நீக்கி, சிலபகுதிகளை வேறு இடத்திலிருந்து வெட்டி ஒட்டி இந்த மோசடியினை இவர்கள் மேற்கொண்டுள்ளனர் என்றே நான் கருதுகிறேன். இத்தகைய ஒரு மோசடி தமிழ்த் தேசியத்தின் பேரிலும் தமிழீழ விடுதலையின் பேரிலும் இடம்பெற்றிருப்பது தமிழர் சமூகத்துக்கு பெரும் வெட்கக்கேடானது. மக்களை ஏமாற்றுவதற்காக வௌ;வேறு மோசடிகளின் ஊடாகப் பொய்க்கதைகளைச் சோடிப்பது கருத்துச் சுதந்திரத்தினையும் மக்களின் அறிவாற்றலையும் அவமதிக்கும் மிகவும் அற்பத்தனமான செயற்பாடாகும். நான் முன்னர் கூறியபடி எமது தற்போதைய போராட்டம் ஜனநாயகத்தின் வழியில் முன்னனெடுக்கப்படுவதாகும். ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களிலொன்று வெளிப்படைத்தன்மை என்பது. எனவே தனிப்பட்டவர்களோ அல்லது அமைப்புக்களோ தம்மை யாரென மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தித் தமது கருத்துக்களை, கண்டனங்களை வெளியிடுவதுதான் அரசியல் நாகரீகம். அதுதான் அரசியல் துணிவு மிக்க செயலாகும். இதைவிட இத்தகைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சில இணையத்தளங்கள் கடந்த காலங்களில் நாடு கடந்த அரசாங்கம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகளை மக்கள் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகிறேன். செப்டெம்பர் மாத இறுதியில் நடைபெறும் இரண்டாது அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்பின் நிர்வாகத்தை நாம் தெரிவு செய்யவுள்ளோம். இந்த நேரத்தில்; மேற்கூறிய மோசடியான அவதூறுப் பரப்புரை முயற்சிகள் இன்னும் தீவிரமடையவும் கூடும். எனினும் நாம் இந்த மோசமான நடத்தைகளைக் கடந்து ஆரோக்கியமான அரசியற் பண்பாட்டை உருவாக்கியாக வேண்டும். இதனால் இத்தகைய அவதூறுச் சேறுவீசல்களை புறம் தள்ளி ஒதுக்கிவிட்டு நாம் முன்னேறிச் செல்லவே விரும்புகிறோம். இனி வரும் காலங்களில் இத்தகைய அவதூறுகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருப்பதனைத் தவிர்த்துக் கொள்ளவும் விரும்புகிறோம். மக்கள் எமது இந்த நிலைப்பாட்டைப் புரிந்து கொள்வார்கள் என நாம் திடமாக நம்புகிறோம். நன்றி விசுவநாதன் உருத்ரகுமாரன் இடைக்கால முதன்மை நிiறேவேற்றுனர்.

Tuesday, August 31, 2010

"என்னைப் படிக்க வையுங்கள். எனது அண்ணாமாரை கண்டு பிடித்து தாருங்கள்." இப்படி உருக்கமாக இறைஞ்சுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தின் புதுமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்த சுகிர்தா ஸ்ரீஸ்கந்தராஜா என்கிற சிறுமி. வயது 14. தற்போது தரம் 10 இல் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் படிக்கின்றார். கடந்த வருடம் யுத்த இடப் பெயர்வின்போது காணமல் போன அண்ணன்மார். வயதான அப்பா. அப்பாவுக்கு வேலை இல்லை. மன ரீதியாகவும் குழம்பிப் போயுள்ள பெற்றோர். இத்தனை இன்னல்கள் இவரைச் சுற்றி நிற்க ஆட்டோவில்தான் பள்ளிக்கு சென்று வருகின்றார் இச்சிறுமி. மாதம் 1000 ரூபா வரை இப்போக்குவரத்துச் செலவு. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி பிள்ளையை ஆட்டோவில்தான் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற நிலை பெற்றோருக்கு. அரசின் உதவியும் இல்லை. அரச சார்பற்ற நிறுவனங்களின் மனிதாபிமானமும் இல்லை.வெளிநாட்டு நிதியும் இல்லை. அப்படியாயின் இந்த பிஞ்சு ஏன் பாடசாலைக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும்?. அவருடைய கால்கள் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது எறிகணைத் தாக்குதலில் சிக்கி விட்டன. ஒரு கால் முழங்காலுடன் துண்டாடப்பட்டு விட்டது. மற்றக் காலிலும் பாதிப்பு. ஆனால் கல்வி கற்று பெரிய நிலைக்கு வருவேன் என்கிற சபதத்தில் அச்சிறுமி.

* “வந்த ஊரில் வாழ்வை தொலைப்பதை விடசொந்த ஊரின் சுடலையில் எரிவதேமேல்…!!!

“‘’ நீ புகுந்த நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் ஒருபோதும் அந்த நாடு உன் சொந்த நாடாக மாறாது. அது நீ இறக்கப்போகும் ஒரு நாடாகவே இருக்கும். உன் பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு” “

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.

வரலாற்றில் பிரபாகரன்

தமிழர்களோடு கதைத்துக்கொண்டிருந்துவிட்டு, பிரிகின்ற போது…”மீண்டும் தமிழீழத்தில் சந்திப்போம்” என்ற பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவருவோம். அப்போது தான் நாங்கள் ஒவ்வொருவரும் தமிழீழத்தை நினைத்துக்கொண்டிருக்க முடியும். இன்றே தொடங்குங்கள…இந்தப் பழக்கத்தை…தமிழர்களோடு கதைத்துக்கொண்டிருந்துவிட்டு, பிரிகின்ற போது…”மீண்டும் தமிழீழத்தில் சந்திப்போம்” என்ற பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவருவோம். அப்போது தான் நாங்கள் ஒவ்வொருவரும் தமிழீழத்தை நினைத்துக்கொண்டிருக்க முடியும். இன்றே தொடங்குங்கள…இந்தப் பழக்கத்தை…