தமிழீழம்,

தமிழீழம்,

Sunday, March 20, 2011

ஏ.... கடலே

ஏ.... கடலே
உனக்கு இரக்கமே இல்லையா?
லெமூரியா கண்டத்தை விழுங்கினாய் - பிறகு
கபாடபுரம் உன் வயிற்றுக்குள்
அடுத்து
தனுஷ்கோடி, பூம்புகார்

இன்று
எத்தனை உயிர்களை
பலி கொண்டாய்
உன் கோர தாண்டவத்தால்
பெரிய ரணகலமே ஏற்பட்டு
இருக்கிறதே

தாயற்ற பிள்ளைகள்
தந்தையற்ற குடும்பங்கள்
பிள்ளைகளைப் பறிக்கொடுத்த
பெற்றோர்கள்

அப்பப்பா....
உன் பிரளயத்தால்
கப்பல்கள் மிதந்த கடலில்
பிணங்கள் மிதந்தன
கருவாடுகள் காய்ந்த கடற்கரையில்
மனிதர்களின் எலும்புகூடுகள்

ஏ....கடலே
நீ ஆடி முடித்து விட்டாய்
ஆழிப் பேரலையை
வீசி அழித்துவிட்டாய்
அடங்கியதா உன் பசி

ஏ.... கடலே
நீ
சரித்திரத்தை மாற்றக்
கற்றுக்கொண்டது  எப்போது?

இவ்வளவு நாட்களாய்
மனிதர்களுக்கு
மீன்களை உணவாக்கினாய் - இன்று
மீன்களுக்கு
மனிதர்களை உணவாக்கினாய்

தரையை கடலாக்கினாய்
கடலை தரையாக்கினாய்

ஏ.... கடலே
நீ தொடுத்த போரில்
உன்னை எதிர்த்தவர்கள் யார்?
எங்கள் அணு ஆயுதமும்
அறிவியல் தொழில் நுட்பமும்
உனக்கு முன்னாள் வெறும் புஸ்வானம்

ஏ.... கடலே
நாங்கள் தோற்றதாக
நீ நினைத்துவிடாதே !
உன்னை எதிர்ப்பதற்கு
யுத்திகள் உருவாகிவிட்டன !

மனிதன்
சந்திரனை தொட்டான்
செவ்வாய்க்கு செயற்கைக் கோள்
அனுப்பினான்
ஆகாயத்தில்
ஆய்வுக்களங்கள் அமைத்தான்

கடலே....
நீ கையை நீட்டாதே !
உன் கையை ஓடிப்பதற்கு
காத்திருக்கிறோம்
காலம் வரும்............


-- தமிழ் மதி  

Friday, March 18, 2011

தங்கள் உயிரையே பணயம் வைத்து தங்கள் நாட்டைக் காக்கப் புறப்பட்ட ஜப்பான் மாவீரர்களான 50 பேரின் முயற்சிகளும் வெற்றி பெற அனைவரும் மனதால் வேண்டிக் கொள்ளுங்கள்.

அணு உலைகளின் வெப்பத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பணிக்கு உதவும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை 400க்கும் அதிகமாக இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அணுக்கதி வீச்சு அதிகமானதால், ஆபத்து கருதி அனைவரையும் மீளப்பெற்றுவிட்டது ஜப்பான்.

ஆனால் ஜப்பானின் அனைத்து மக்களையும் காப்பாற்ற தங்கள் உயிரையே பணயம் வைத்து மாபெரும் தியாகிகளாக 50 பேர் இப்பொழுது களத்தில் இறங்கியிருக்கின்றார்கள். இந்த ஐம்பது பேரும் நாட்டைக் காக்கும் தியாகிகளாக, தங்களுக்கு அணுக்கதிர் விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்து கொண்டே நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த 50 பேரும் இப்போ குளிர்ந்த நீரை அந்த அணுக்கதிர் மூலகத்தில் நேரடியாகக் கொட்டி குளிர வைக்க களத்தில் இறங்குகின்றனர். இது இவர்களின் சவக்குழியாகவே அமையும் என்றாலும், அவர்கள் அந்த முயற்சியில் இறங்கிவிட்டனர்.இன்னும் 48 மணிநேரத்தில் இவர்கள் மூலமாக நிலைமை கட்டுக்குள் வந்தால் ஜப்பான் தப்பும். இல்லையேல் சுடுகாடாகும்.

24 வருடங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் இருந்த �செர்னோபில்� (Chernobyl) நகரத்தில் நடைபெற்ற அணுவாலை வெடிப்பினால். அந்த நகரமே இன்று சுடுகாடாக காட்சியளிக்கிறது. அங்கு நடைபெற்ற அணு வெடிப்பை Super Core Melt Accident என்பார்கள். அந்த Super Core Melt Accident ஜப்பானில் இதுவரை நடைபெறவில்லை. அதற்கான காலக்கெடுவாக 48 மணிநேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தங்கள் உயிரையே பணயம் வைத்து தங்கள் நாட்டைக் காக்கப் புறப்பட்ட ஜப்பான் மாவீரர்களான 50 பேரின் முயற்சிகளும் வெற்றி பெற அனைவரும் மனதால் வேண்டிக் கொள்ளுங்கள்.

Tuesday, March 8, 2011

வடபகுதி கடல் ஊடாக தரையிறங்கும் விடுதலைப்புலிகளின் அணிகளே அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பை தளமாகக் கொண்ட "லக்பிம" வாரஏடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது.

வடபகுதி கடல் ஊடாக தரையிறங்கும் விடுதலைப்புலிகளின் அணிகளே அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பை தளமாகக் கொண்ட "லக்பிம" வாரஏடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு சென்றுள்ள விடுதலைப்புலிகளின் படையணிகள், தமது ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்ததும், வடபகுதி கடற்கரை ஊடாகவே தரையிறக்கத்தை மேற்கொள்ளவுள்ளனர் என அது மேலும் தெரிவித்துள்ளது. வடபகுதி கடல் ஊடாக தரையிறங்கும் விடுதலைப்புலிகளின் அணிகளே அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளதாகப், புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழர்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளதாம். </span>
<span> </span>
<span>அதேசயம், தென் சூடானை போன்றதொரு, தீர்வை வடக்கு � கிழக்கில் கொண்டுவரவும் புலம்பெயர் தமிழ் சமூகம் முற்பட்டுள்ளது என்ற செய்திகளும் தற்போது கசிந்துள்ளதாக லக்பிம தெரிவித்துள்ளது. இந்த பணிகளுக்கான நிதி உதவிகளை புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்ந்து வழங்கியவாறு உள்ளதாகவும், விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு கிளைகள் தமது செயற்பாட்டை வேகப்படுத்தி வருகின்றன எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது. கனடாவையே விடுதலைப்புலிகள் பிரதான தளமாகப் பயன்படுத்தக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளதாக அச் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது. </span>

விடுதலைப்புலிகளின் பல இளநிலை தளபதிகள் கனடாவுக்கு சென்றுள்ளதாக சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஊடாக தப்பிச் சென்ற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதானமாக தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் ஊடாகவே பல படையணிகள் தப்பிச் சென்றுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 600 இற்கு மேற்பட்டோர் ஏற்கனவே தப்பிச் சென்றுள்ளனர் என பிற குறிப்புகள் தெரிவிப்பதாக லக்பிம தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ் சமூகம் பல அரசியல் போராட்டங்களை முன்னெடுத்துள்ள போதும் அது ஒரு ஆயுதப் போராட்டத்தையும் விரும்புகிறது என்ற உண்மையும் வெளிச்சமாகியுள்ளதாக லக்பிம தெரிவித்துள்ளது.

எனவே அவர்கள் முதலில் கெரில்லா தாக்குதல்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என்கிறது லக்பிம.

இருப்பினும் மாறுபட்ட , இல்லை நடைமுறைக்கு தற்போது சாத்தியமற்ற செய்திகளை சிங்கள ஊடகங்கள் வெளியிடுவதன் மூலம், இராணுவ நிலைகளை அகற்றுவதை தடுக்கவும், தமது பக்கத்தில் ஞாயம் இருப்பதாக காட்டிக்கொள்ளவும் வெளிநாடுகளில் குறிப்பாக கனடா போன்ற நாடுகளில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசுகளை திசை திருபவும் புலம் பெயர் தமிழ் சமூகத்தினூடகவே தாம் தகவல்களை பெற்றோம் எனக் கூறி புலம் பெயர் தமிழ் சமூகத்தினுள் பிரிவினைகளை உன்ன்டுபன்னவே இது போன்ற அறிக்கைகளை வெளியிடுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை யார் தடுத்தாலும் புலம் பெயர் தமிழ் சமூகம் இனபடுகொலை மற்றும் போர்க் குற்றங்களை கைவிட போவதில்லை.