தமிழீழம்,

தமிழீழம்,

Sunday, October 17, 2010

தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன்

Add caption


தொப்புள் கொடியில்
உயிர்க் கொடி
ஏற்றிய தோழா
ஈழத் தமிழர்களின் முத்துக்குமரா!

இணையத்திலே உன் அழகிய
முகம் பார்த்தோம்
இதயத்திலே கருகிப் போனது
எங்கள் மனம்!

எவ்வளவு இளகிய
மனம் கொண்டவன் நீ
எங்களுக்காய்...
ஏன் கருகிப் போனாய்?

தூத்துக்குடியில்
முத்துக் குளித்தவன் நீ
சாஸ்திரி பவனில்
ஏனையா தீக்குளித்தாய்?

குடம் குடமாய்
நாங்கள் அழுது வடித்த
எங்கள் கண்ணீரில்
உன் முகமே பூக்கிறது!

எம் தமிழ்மீது
நீ கொண்ட பற்றுக்கு
எல்லையே இல்லை என்பதை
இப்படியா உணர்த்துவது!

தமிழினத் தலைவர்கள்
என்று சொல்லத் துடிக்கும்
எங்கள் தலைவர்களின்
நாக்கை அறுத்தாய் நீ!

கையாலாகாத பரம்பரை
என நினைத்தாயோ
பூவாய் இருந்தவன் நீ
புயலாய் ஏன் வெடித்தாய்?

முப்பது ஆண்டுகள்
நாம் சுமந்த வலிகள்
போதாத ஐயா
ஏனையா எரிந்து போனாய்?

பெரு வலியோடு
உனைப் பெற்ற தாயை
எந்த முகத்தோடு போய்
நாங்கள் இனிப் பார்ப்போம்

எட்டாத தூரத்தில்
வாழ்ந்தாலும்
வாகை மரம் போல
வாடிப் போய் நிற்கிறோம்

மண்ணெணையை
உன் மீது ஊற்றி
தமிழ்மண்ணைக் காக்க
ஏனையா உனைக் கொடுத்தாய்?

தமிழீழம் வாழவே
எங்களை வாழ்த்தி
உன் வாழ்வை
ஏனையா நீ அழித்தாய்?

மரணத்திடம் மண்டியிடாமல்
மண் எங்கும் ஓடுகிறோம்
மரணத்தை தேடி நீ
ஏனையா ஓடினாய்?

தமிழீழ வரலாற்றில்
முத்தான உன் பெயர்
இனி எழுத்தாணிகளின்
முதல் வரியாகட்டும்!

உன் தியாகத்தின் முன்
நாங்கள் வெறும் சருகுகளே!
தமிழகத்தின் தாய்மடியில்
கண்ணீர் அஞ்சலி செய்கிறோம்!

- வசீகரன்
நோர்வே

எழுவாய் நீ நெருப்பாய்!

எழுவாய் நீ நெருப்பாய்!


தமிழா நீ தமிழ் வாழப்
பணி ஆற்று!

தமிழல்லவா உன்னை
இயக்கும் உயிர்க்காற்று!

உறவை நீ இழக்காதே!
தமிழையே மொழிவாய்!

பிறமொழி கலக்காதே!
கலந்தால் நீ அழிவாய்!

இசைவிழா மேடையில்
தமிழிசை முழக்கு!

வசையாரும் பாடினால்...
வரலாற்றை விளக்கு!

மண்மீதில் தமிழ்ப்புலவன்
மனம் நோக விடாதே!

உண்ணாமல் அவன் வாழ்ந்தால்
உணவை நீ தொடாதே!

தமிழ்வாழ உழைப்போர்க்கு
துணையாக இருப்பாய்!

தமிழையார் எதிர்த்தாலும்
எழுவாய் நீ நெருப்பாய்!


உருவாக்கம் :காசி ஆனந்தன்

Friday, October 1, 2010

http://www.youtube.com/watch?v=6EboBSRtYKM&feature=player_embedded
இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War
Without Witness என்கிற அமைப்பு கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி
யுத்தத்தின்போது இலங்கை அரசினால் மனிதப் பேரழிவுகளும், யுத்தக்
குற்றங்களும் நடத்தப்பட்டன என்று தீவிரமாகப் பிரசாரம் செய்து செய்து
வருகின்றது.
...




மனிதப் பேரழிவுகள் மற்றும் யுத்தக்
குற்றங்கள் ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் என்று அவ்வப்போது புகைப்படங்கள்,
காணொளிகள் ஆகியவற்றை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றது.


அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரம்
என்று சுமார் நான்கு மாதங்களுக்கு முன் புகைப்படங்கள் சிலவற்றை
வெளிப்படுத்தி இருந்தது.
தற்போது அதே இளைஞன் இராணுவத்தினரால் கட்டி வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட காணொளி என்று ஒன்றை பிரசுரித்துள்ளது.

காணொளியில் சிங்கள உரையாடல்கள்
கேட்கின்றன. உதாரணமாக எத்தனை பேரைக் கொன்றிருக்கின்றாய் ? என்று
அவ்விளைஞனிடம் ஒரு கட்டத்தில் வினவப்படுகின்றமையை காணொளியில் கேட்க
முடிகின்றது.