தமிழீழம்,

தமிழீழம்,

Thursday, April 28, 2011

உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை ஒன்றை முன்வைக்கவேண்டும்

சிரியாவில் மனித உரிமை மீறல் நடைபெற்றதாகக் கூறி, அவ்வழைப்பை ரத்துச் செய்த ராஜ குடும்பம், இலங்கை நிலை குறித்தும் அறிந்திருக்கவேண்டும். எனவே இலங்கைத் தூதுவருக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பை சிரியா போல ரத்துச்செய்யவேண்டும் என பிரித்தானியா வாழ் மக்கள் மட்டுமல்லாது, உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை ஒன்றை முன்வைக்கவேண்டும். திருமண விழா நாளை நடைபெறவுள்ளதால், மக்கள் விரைந்துசெயல்படுவது நல்லது. சென் ஜேம்ஸ் மாளிகையின் தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் மற்றும் முகவரிகள் இங்கே தரப்பட்டுள்ளது.
(+44) (0)20 7930 4832.
(+44) (0)20 7930 4832.
webeditor@royal.gsx.gov.uk
support@royal.gsx.gov.uk

புதைந்த நீங்கள் மீண்டும் எழுவீர்..!!

புதைந்த நீங்கள் மீண்டும் எழுவீர்..!!

     
மண்ணுக்குள் தூங்கும்
எம் வீரர்களே
விழியில்
எதிரியைத் தேடி
களத்துள் புகுந்தீர்கள்..!
எதிரியின் காவலரணை
எரித்தீர்கள்
வீறுடன் எதிரியின்
துப்பாக்கியை எடுத்தீர்
வென்றீர்..!
வென்றவர் நீங்கள்
எமது பாசறைக்கு
மீண்டும் வரவில்லை
நீங்கள் மீட்ட மண்ணில்
விதையாய்ப் புதைந்தீர்..!
புதைந்த மண்ணில்
மீண்டும் எழுந்து
எமது மண்ணில்
பிறந்த புதிய
புலியாய்
மீண்டும் மீண்டும்
விழ விழ எழுவீர்கள்
எமது மண்ணில்..!

ஆக்கம் -: முகமறியா உறவு