தமிழீழம்,

தமிழீழம்,

Monday, May 16, 2011

ஈழத் தமிழரின் கண்ணீரை துடைக்கும்வரை பட்டம் வேண்டாம்

2009 ல் ஈழத் தமிழரின் கண்ணீரை துடைக்கும்வரை பட்டம் வேண்டாம் என்று பட்டம் வாங்க மறுத்த சுமதியிடம் பெறப்பட்ட பேட்டியை மீண்டும் படிக்கும் போது எனக்குள் வேகம் வரும்... அதை அப்படியே உங்கள் முன் வைத்திருக்கிறேன்...


கடந்த 22/3/2009 தேதி அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 43 வது பட்டமளிப்பு விழா கல்லூரியில் நடைபெற்றது.மொத்தம் 288 மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைகத்தின் துணைவேந்தர் பொன்னவைக்கோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த நாடு வல்லரசாக வேண்டுமானால் இளைஞர்களின் மனதுவைத்தால் தான் முடியும் ஆக இளைஞர்கள் இந்த நாட்டின் நட்சத்திரங்கள் என பேசிவிட்டு மாணவர்களுக்கு பட்டமளித்துக்கொண்டு இருக்கும் போது அதே கல்லூரியில்Bsc(zoo) படித்து முடித்த சுமதியை பட்டமளிக்க மேடைக்கு வந்த சுமதி அழுதுகொண்டு இலங்கையில் எமது சொந்தங்கள் கொல்லப் பட்டுகொண்டிருக்கும் போது இங்கு சந்தோசமாக பட்டத்தை வாங்கி அதை கொண்டாட முடியாது எனவே எனக்கு பட்டம் வாங்க விருப்பமில்லைன்னு சொல்லிவிட்டு போக அனைவருக்கும் பேரதிர்ச்சி,

நாம் சுமதியை அரியலூர் மாவட்டம், செந்துறை ரோட்டில் 7கி.மீ உள்ள ஓட்டக்கோயில் கிராமத்தில் பெரியார் சிந்தனை உள்ள குடும்பத்தில் (அப்பா தங்க‌வேல்(57வயசு)அம்மாயில்லை, அண்ணன்செந்தில் bsc grduate) பிறந்த சுமதிக்கு 6 மாதத்துக்கு முன் தான் கொத்தவாசலை சேர்ந்த முத்தமிழ் செல்வனுக்கு திருமணம் முடிஞ்சிருக்கு.இப்ப அரியலூர் அரசு கலைக்கல்லூரியிலயே Msc(environmental secience)படிக்கிரார் அவரை மானமும், அறிவும் மனிதனுக்கும் அழகுயென வாசக்காலில் எழுதப்பட்டிருந்த, அவரின் கூரைவீட்டில் சந்திதோம்..
இன்னைக்கு 120, நேற்று 140 என போன மூனு மாசத்தில பத்தாயிரத்துக்குமெல தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிராங்க‌, தமிழர்களின் உயிரிழப்புகளை கணக்கு பண்ணிக்கிக்கிட்டேயிருக்கிறோம், இங்கயிருக்கிவங்க இளைஞர்களின் கையிலதான் நாட்டின் எதிர்காலமிருக்குன்னு சொல்லுராங்க ஆனா இங்க அப்படி எதுவுமில்லை, என் பேரை பட்டம் வாங்க கூப்பிட்டாங்க,மேடைக்கு போகும்போதே என்னால போகமுடியல, அதனால மேடையிலயே அழுதுக்கிட்டு, இலங்கையில் தமிழர்கள் கொல்லப் பட்டுகொண்டிருக்கும் போது அதற்க்கு தீர்வுகாணாது பட்டம் வாங்க விருப்பமில்லைன்னு, சந்தோசமாக பட்டத்தை வாங்கி அதை கொண்டாடமுடியாது எனவே எனக்கு பட்டம் வாங்க விருப்பமில்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.அதுக்கப்புறம் எல்லாம் முடிஞ்சி பிரின்ஸ்பால் ரூம்ல என்னை கூப்பிட்டு துனைவேந்தர்,பிரின்ஸ்பால் எல்லாம் சேர்ந்து,ரொம்ப நேரம் பேசி சர்ட்டிபிக்கட் தந்து அனுப்பிட்டாங்க எனும் போதே கண்களில் கண்ணீர் ததும்ப அங்கிருந்து விடைபெற்றோம்.

கல்லூரி நிர்வாகத்திடம் பேசினோம். முதல அந்த பொண்ணு வாங்கல அப்புறம் கடைசியா வாங்கிட்டு போயிடிச்சி என்றனர்.

முத்துக்குமார் பற்றவைத்த தீ
இன்னும் இளைஞ்ர்களின் இதயத்திலிருந்து அணையவில்லை இலங்கை தமிழருக்கு நீதி கிடைக்கும்வரை அந்த தீ அணையாது போல....


சுமதியை மீண்டும் சந்தித்தேன்.. இன்னமும் அதே துடிப்புடன் இருப்பதை கண்டு பெருமிதம் கண்டேன் அதனால் தான் இக்கட்டுரையை பிரசுரம் செய்கிறேன். சுமதி போன்ற மாணவர்களால் தான் மாற்றம் நிச்சயம்

No comments:

Post a Comment